Published : 02 Dec 2016 11:04 AM
Last Updated : 02 Dec 2016 11:04 AM
போக்குவரத்து நெரிசல்
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் அரசு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. வாணியம் பாடி பேருந்து நிலையத்தில் போதிய இட வசதி இல்லை. பேருந்துகள் வந்து செல்லவே இடப் பற்றாக்குறை இருக்கும்போது, அரசு வாகனங்கள் பேருந்து நிலையத்துக்குள் ஆங் காங்கே நிறுத்தப்படுகின்றன. இதை போக்கு வரத்து போலீஸார் கண்டு கொள்வதில்லை.
-சரண்யா, வாணியம்பாடி.
பழுதடைந்த சாலைகள்
திருப்பத்தூர் நகராட்சியில் மேற்கொள்ளப் பட்டு வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணி யால் அனைத்து வார்டுகளிலும் சாலைகள் சேதமடைந்துள்ளன. சில வார்டுகளில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணி முடிந்தும், அங்கு சாலைகளை சீரமைக்கவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது, மழைக் காலம் தொடங்கி உள்ளதால், பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படும்.
-மோகன், ஹவுசிங் போர்டு, திருப்பத்தூர்.
சிமென்ட் மூட்டை மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சா புரம் ஒன்றியம் வடபுழுதியூர் கிராமத்தில் வசிக்கும் நான், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை வீட்டை கட்டினேன். அந்தப் பணிக்கான 32 சிமென்ட் மூட்டைகளை இன்னும் வழங்காமல் உள்ளனர். இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டால், உரிய பதில் இல்லை. வட்டார வளர்ச்சி அலுவலர் மாறுதலாகி சென்றுவிட்டார் என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர்.
மேலும், எனக்கு வழங்க வேண்டிய 32 சிமென்ட் மூட்டைகளை பெற்றுக் கொண்டதாக போலி கையெழுத்துப் போட்டு மாற்றி உள்ளனர். இதுகுறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ராமஜெயம், வடபுழுதியூர்.
விஏஓ வருவதில்லை
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப் பட்டு அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு விஏஓ சரி யாக வருவதில்லை. அவரிடம் கேட்டால், ‘நேற்று, நேற்று முன்தினம் வந்தேன்’ என்று கூறுகிறார். கிராம நிர்வாக அலுவலகங்களில் நடைபெ றும் முறைகேட்டை ஒழிக்கவேண்டும்.
-பாரதிராஜா, அரசம்பட்டு.
மின்சாரம் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் விவசாய நெற்களம் உள்ளது. அந்த நெற்களத்தில் கோரைப் பாய்கள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. அங்கு இரவு நேரத்தில் மின் கம்பத்தில் கொக்கிப் போட்டு மின்சாரம் திருடப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-செல்வம், தெள்ளூர்.
கழிவுநீர் கால்வாயில் அடைப்பு
திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ள காந்தி சிலையில் இருந்து தேர்கள் நிற்கும் இடம் வரை கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. எனவே, கால்வாயை சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-குணசேகரன், திருவண்ணாமலை.
கிழிந்த ரூபாய் நோட்டுகள்
மேல்விஷாரம் தபால் நிலையத்தில் ஓய்வூ தியத் தொகை ரூ.10 ஆயிரம் வாங்கினேன். 50 ரூபாய் நோட்டுகள் 100 வீதம் 2 கட்டுகள் கொடுத்தனர். ரூபாய் நோட்டுக் கட்டில் ராணிப்பேட்டை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற முத்திரை இருந்தது. நோட்டுக் கட்டு களை பிரித்துப் பார்த்தபோது, நடுவில் இருந்த 10 முதல் 15 நோட்டுகள் கிழிந்தும் வெள்ளைத் தாள் ஒட்டியும் இருந்தன.
இதுகுறித்து, தபால் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, வங்கியில் இருந்து கொடுத்த பணத்தை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றனர். வங்கிகள் என்பது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் உள்ளது. தொல்லை கொடுப்பதற்கு இல்லை.
-மசூத் அஹ்மது, ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர், மேல்விஷாரம்.
ஒரே மாதத்தில் சேதமான சாலை
வேலூர் சங்கரன்பாளையம் ஜெகநாதன் பிள்ளைத் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இது விதிகளின்படி கட்டவில்லை. இதை மாநக ராட்சி அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ள வில்லை. அதே தெருவில் கடந்த ஒரு மாதத் துக்கு முன்பு சிமென்ட் சாலை அமைத்தனர். தற்போது, அந்த சாலையும் சேதமடைந்துள் ளது. இதையாவது, மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.
-வெங்கடேசன், வேலூர்.
செயல்படாத டிக்கெட் கவுன்டர்கள்
காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகளுக் காக 4 டிக்கெட் கவுன்டர்கள் உள்ளன. அங்கு ஊழியர்கள் இருந்தும் ஒரே ஒரு கவுன்டர் மட்டுமே செயல்படுகிறது. இதனால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கவேண்டி இருக்கிறது. நான்கு கவுன்டர்களும் திறந்திருந்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.
-அசோகன், வேலூர்.
குண்டும், குழியுமான சாலைகள்
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட மீனாட்சி மேல்நிலைப்பள்ளி, பூங்கா பள்ளி அருகேயுள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.
-இம்ரான், திருப்பத்தூர்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT