Published : 02 Dec 2016 11:02 AM
Last Updated : 02 Dec 2016 11:02 AM
திருவாரூரில் கொசுத்தொல்லை
திருவாரூர் நகரத்தில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களாக கொசு உற்பத்தி அதிகரித்திருப்பதை நகராட்சி நிர்வாகம் உணர்ந்து, கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- பிரபாகர், திருவாரூர்.
குப்பையை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்ளாட்சி நிர்வாகிகள் பதவி காலம் முடிவடைந்து அதன் செயல்பாடுகள் அனைத்துமே உள்ளாட்சி அதிகாரிகளின் கையில் சென்ற தினத்திலிருந்து குப்பை அள்ளுதல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதில் மெத்தனமாக மேற்கொள்ளப்படுகிறது. மன்னார்குடி ஒன்றியம் உள்ளிக்கோட்டை பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகிலேயே குப்பை அகற்றப்படாமல் உள்ளது.
எப்போதாவது குப்பையை அகற்றுகின்றனர். இதைப்போலவே மாவட்டம் முழுவதும் பரவலாக குப்பை அகற்றப்படாமல் இருக்கிறது. உரிய அலுவலர்கள் இந்த சுகாதார சீர்கேடு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வநாதன், உள்ளிக்கோட்டை.
ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தை குறைக்க…
நீடாமங்கலம் ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தை குறைக்க வேண்டுமானால் மன்னார்குடியிலிருந்து தஞ்சை வழியாக செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலை திருவாரூர் வழியாகவும், கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை திருவாரூரிலிருந்தும் இயக்கினால் நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் முடப்படும் நேரம் குறையும்.
- பேராசிரியர் பாஸ்கரன், திருவாரூர்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT