Published : 20 Dec 2016 09:58 AM
Last Updated : 20 Dec 2016 09:58 AM
தூத்துக்குடி- பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் காணப்படும் ஆபத்தான பள்ளத் தால் வாகனங்கள் தடுமாறி விபத்துக் குள்ளாகும் நிலை உள்ளது.
‘தி இந்து’ நாளிதழ் உங்கள் குரல் பகுதிக்கு பேசிய தூத்துக்குடியை சேர்ந்த வாசகர் ஒருவர், தூத்துக்குடி புறவழிச்சாலை சந்திப்பில் மேம்பாலத்துக்கு அடியில் உள்ள பெரிய பள்ளத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான வாகனங்கள்
தூத்துக்குடி- பாளையங் கோட்டை தேசிய நெடுஞ்சாலையும், தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் புறவழிச் சாலை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
துறைமுகம்- மதுரை செல்லும் வாகனங்கள் பாலத்தின் மேல் பகுதி வழியாகவும், தூத்துக்குடி- பாளையங்கோட்டை செல்லும் வாகனங்கள் பாலத்துக்கு அடியிலும் செல்லும் வகையில் வடக்கு- தெற்காக இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக் குடியில் முக்கிய சாலை சந்திப்பாக இந்த பகுதி அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சந்திப்பை கடந்து செல்கின்றன. பாலத்துக்கு அடியிலும் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.
விபத்துகள் அதிகரிப்பு
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மிகப் பெரிய பள்ளம் காணப்படுகிறது. சுமார் 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்டதாக இந்த பள்ளம் மேம்பாலத்துக்கு கீழ்புறத்தில் உள்ளது.
நான்கு திசைகளில் இருந்து வரும் வாகனங்களும் இந்த பள்ளத்தை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த பள்ளம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
சர்வீஸ் சாலைகள் மோசம்
இதேபோல் மேற்கில் இருந்து வரும் வாகனங்கள் வடக்கு நோக்கி சர்வீஸ் சாலையில் திரும்பும் பகுதியிலும் பெரும் பள்ளம் காணப்படுகிறது. இந்த பள்ளத் தையும் சீரமைக்க வேண்டும்.
மேலும், புறவழிச்சாலையின் இருபுறங்களிலும் உள்ள சர்வீஸ் சாலைகள் முழுவதுமே ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அவற்றையும் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.
விரைவில் சீரமைப்பு
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘புறவழிச்சாலை சந்திப்பில் பாலத்துக்கு அடியில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது.
சீரமைக்கும் பணிகள் தொடங்கிய போது ஒப்பந்த காரர்களுக்குள் பிரச்சினை ஏற் பட்டதால் பணி நிறுத்தப்பட்டது. தற்போது அனைத்து பிரச் சினைகளும் தீர்க்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. எனவே, இந்த பள்ளமும் ஓரிரு நாட்களில் முழுமையாக சீரமைக்கப்படும்’ எனத் தெரிவித்தனர்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT