Published : 20 Dec 2016 09:57 AM
Last Updated : 20 Dec 2016 09:57 AM

உங்கள் குரல்: குன்னூர் நகராட்சிக் கடைகளால் வருவாய் இழப்பு?

குன்னூர் நகராட்சி மார்க்கெட் கடைகளால் நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், இழப்பை ஈடு செய்ய மறு மதிப்பீடு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் குன்னூர் நகராட்சி மார்க்கெட்களில் சுமார் 3000 கடைகள் உள்ளன. நகராட்சிகளின் வருவாயைப் பெருக்க இந்த கடைகளை ஏலம் விட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் வியாபாரிகள் ஏலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போதுமான வருவாய் இல்லாததால் இந்த கடைகளால் நகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால், வாடகை மறு மதிப்பீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் சு.மனோகரன், ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பதிவில் கூறியிருப்பதாவது: உதகை மற்றும் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகள் பல தலைமுறைகளாக வியாபாரிகளிடமே உள்ளன. ஆனால், நகராட்சி மார்க்கெட் கடைகள் முதல் தலைமுறையினர் வசம் இல்லை. பெரும்பாலான கடைகள் விற்பனைக்கு வந்துவிட்டன. இந்தக் கடைகளை ‘குட்வில்’ என்ற பெயரில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கின்றனர். இதனால் நகராட்சிக்கு எவ்வித வருவாயும் இல்லை. நகராட்சி நிர்வாகம் வசம் கடைகள் யாரிடம் உள்ளன என்ற தகவல் இல்லை. இந்த கடைகள் கைமாறும்போது, பல லட்சம் ரூபாய் கை மாறுகிறது. இதன் காரணமாக நகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் உரிய அனுமதி இல்லாமல் கடைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. பல கடைகள் இரு மாடிகளாக உயர்த்தப்பட்டுள்ளன என்றார்.

குன்னூர் நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் 950 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் வாடகைதான் நகராட்சியின் முக்கிய வருவாய் ஆதாரம். கடைகள் உரிமை காலம் நிறைவடைந்துள்ளது. வியாபாரிகள் ஏலம் விட வேண்டாம் எனக் கூறுகின்றனர். வாடகையை 50 சதவீதம் உயர்த்திக் கொள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடைகள் ஆய்வு செய்யப்பட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது கடைகள் உரியவர் வசமுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். கடை உரிமையாளர் அல்லது வேறு நபர்களிடம் கடையிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x