Published : 02 Dec 2016 10:57 AM
Last Updated : 02 Dec 2016 10:57 AM

உங்கள் குரல்: கன்னியாகுமரியில் ஏமாற்றும் நிறுவனங்கள்

மதுக்கூடமான சாலை

புதுக்கடையில் பிரதான சாலையோரத்தில் மதுக்கடை உள்ளது. இங்கு மதுக்கூடம் இல்லாததால் அனைவரும் சாலையில் நின்று மது அருந்துகிறார்கள். இதனால் பெண்கள், மாணவிகள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஞ்சித், புதுக்கடை

போலீஸார் கட்டாய வசூல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழக- கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் சரக்கு வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் கேரளத்துக்குள் நுழைய அங்குள்ள போலீஸார் ரூ.50 வசூலிக்கிறார்கள். இதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெயர் வெளியிட விரும்பாத லாரி ஓட்டுநர்

சாலைகள் படுமோசம்

காயல்பட்டினத்தில் அனைத்து சாலைகளும் சேதமடைந்து மோசமாக உள்ளது. தற்போது மழை பெய்வதால் பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடிய வில்லை. சாலைகளை உடனடி யாக சீரமைக்க வேண்டும்.

சுல்தான், காயல்பட்டினம்

பணப்பரிவர்த்தனை இல்லை

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஐஓபி கிளை யில் கடந்த 8-ம் தேதியிலிருந்து பணப்பரிவர்த்தனை சரிவர நடைபெறவில்லை. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டி.தேவதாஸ், ராமநாதபுரம்

அபாய நிலையில் மின்கம்பம்

திருச்செந்தூரில் சாமி சப்பரங் கள் வலம் வரும் உள்மாட வீதி யில் மின்கம்பம் பழுதடைந்துள் ளது. காங்கிரீட்கள் பெயர்ந் துள்ள இந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

ராமநாதன், திருச்செந்தூர்

ரேஷன் கடையில் முறைகேடு

கோவில்பட்டி ரேஷன் கடை களில் மின்சாரம் இல்லை என்று கூறி பொருட்களை சரிவர வழங்காமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். ரேஷன் கடை பணியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர் களுக்கு பொருட்களை வழங்கு கிறார்கள். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

கோவில்பட்டி வாசகி

ஏர்வாடியில் ஆக்கிரமிப்பு

ஏர்வாடி நெடுஞ்சாலைத்துறை சாலையானது கடைக்காரர் களால் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. இதுகுறித்து புகார் செய்தும் நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சாகுல்ஹமீது, ஏர்வாடி

‘குடி’மகன்களால் தொல்லை

கடையம் கருப்பசாமி கோயில் தெருவில் சமூக விரோதிகள் மதுபானம் அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து போட்டு செல்கின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இசக்கிராஜ், கடையம்

நிவாரணம் வழங்கப்படுமா?

பருவமழை பொய்த்துவிட்டதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே விவ சாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்.எம்.தாணு, தோவாளை

அரசு மருத்துவமனையின் அவலம்

நாங்குநேரி அருகே அரசு மருத்துவமனை உள்ளது. ஆனால், அது செயல்படாமல் உள்ளது. அதனை செயல்படுத்த நடவடிக்கை தேவை.

தேரிராஜா, குசவன்குளம்

சிக்னல் விளக்கு எரியுமா?

தென்காசி பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் காலை 9 மணி வரை சிவப்பு விளக்கு எரிவதில்லை. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. சிக்னலை சரி செய்ய வேண்டும்.

அருண் நாராயணன், குற்றாலம்

பழுதடைந்துள்ள சாலை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்துக்கு செல்லும் சாலை மோசமாக உள்ளது. இச் சாலையை சீரமைக்க வேண்டும்.

தூத்துக்குடி வாசகர்

பேருந்து இயக்கப்படுமா?

நாகர்கோவிலில் இருந்து திசையன்விளைக்கு பாயின்ட் டூ பாயின்ட் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சார்லஸ், நாகர்கோவில்

ஏமாற்றும் நிறுவனங்கள்

வெளிநாடுகளுக்கு அனுப்புவ தாக சில டிராவல்ஸ் நிறுவனங் கள் கன்னியாகுமரி மாவட்டத் தில் இளைஞர்களை ஏமாற்றி பெரும் மோசடியில் ஈடுபட்டு வரு கின்றன. இதுகுறித்து போலீஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிவகுமார், கன்னியாகுமரி

ரேஷன் கடைகளில் லஞ்சம்

கடையம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைக்கு பருப்பு, பாமாயில் கிடைப்பதில்லை. ஆனால், ரூ.50 கொடுத்தால் கிடைக்கிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடையம் பகுதி வாசகர்.





*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x