Published : 20 Dec 2016 10:10 AM
Last Updated : 20 Dec 2016 10:10 AM
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள் ளது.
திருவில்லிபுத்தூருக்கு பல் வேறு சிறப்புகள் உள்ளன. குறிப்பாக ஆண்டாள் திருக்கோயிலும், ரங்கமன்னார் கோயிலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டவை. திருப்பாவை பாடிய ஆண்டாள் பிறந்து, வளர்ந்து கோயில் கொண்டுள்ள திருவில்லிபுத்தூருக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர்.
தற்போது, மார்கழி மாதம் என்பதால் ஆண்டாள் கோயிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோரும் ஆண்டாள் கோயிலுக்கு தினமும் வரத்தொடங்கியுள்ளனர்.
ஆனால், சிறப்புமிக்க திருவில்லிபுத்தூரில் பேருந்து நிலையம் அடிப்படை வசதிகள் இல்லாமலும், இட நெருக் கடியுடனும் இயங்கி வரு கிறது.
மேலும், பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், தொடர்ந்து அவை அதிகரித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, ‘தி இந்து’ உங்கள் குரலில் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரத்தினவேல் என்ற வாசகர் தெரிவித்ததாவது:
திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் இடநெருக்கடியுடன் இயங்கி வருகிறது. பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் சாலை ஓரத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. குறிப்பாக டிபன் கடைகள் மூலம் ஆக்கிரமிப்பு அதிகமாகி வருகிறது. பலர் தங்களது அடுப்புகளை சாலை ஓரத்தில் கொண்டுவந்து வைத்துள்ளனர்.
அதோடு, கடைகளின் முன் ஏராளமான இருசக்கர வாகனங்களும் நிறுத்தப் படுகின்றன. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதோடு அப்பகுதியில், நடந்து செல்வோரும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.
எனவே, திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலும், அதன் வெளிப்பகுதியிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தோடுகுளம் கிராமத்தில் இடியும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டம் தோடுகுளம் கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரலில் இடியும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
காளையார்கோவில் ஒன்றியம் சிலுக்கபட்டி ஊராட்சியைச் சேர்ந்தது தோடுகுளம் கிராமம். இங்கு வடக்கு, தெற்கு என இரு ஊராக உள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்குள்ள மக்கள் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெற்று வருகின்றனர். இங்குள்ள மேல்நிலைத் தொட்டியை சுத்தப்படுத்தி பல மாதங்கள் ஆகின்றன. இதனால் பாசி படர்ந்து இடியும் நிலையில் உள்ளது. இதற்கு கீழ் நின்று தண்ணீர் பிடிக்கவே மக்கள் அச்சப்படுகின்றனர். கண்மாய்க் கரையில் உள்ள குடிநீர் தொட்டியிலிருந்து தண்ணீர் விநியோகம் மேடான பகுதிக்கு செல்லாததால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்தப் பிரச்சினையை தீர்க்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தோடுகுளம் கிராமத்தில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து காளையார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா கூறுகையில், தோடுகுளம் கிராமத்திலிருந்து இது தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை. இருந்தாலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT