Published : 09 Dec 2016 10:13 AM
Last Updated : 09 Dec 2016 10:13 AM
பாழ்படும் அரசு அலுவலகம்
பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில், தாட்கோ அலுவலகம் அரசு சார்பில் கட்டப்பட்டது. தற்போது அது பயன்பாடு இல்லாமல் சேதம் அடைந்தும், புதர் மண்டியும் கிடக்கிறது. இந்த அலுவலகத்தை, சுத்தப்படுத்தி அரசு பயன்படுத்த வேண்டும்.
ஸ்ரீ, பாளையங்கோட்டை
விளக்கம் தரப்படுமா?
பள்ளியாடி பகுதியில் பஞ்சாயத்து அலுவலகங்களில் ரேஷன் கார்டு ஜெராக்ஸ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவ ணங்களை வாங்குகின்றனர். ஏன் என்று தெரியவில்லை. அது குறித்து மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு விளக்க வேண்டும்.
வனிதா, பள்ளியாடி
வெட்டப்படும் மரங்கள்
திருநெல்வேலியில் நான்கு வழிச்சாலை அமைக்கும்போது சாலையோர மரங்களை இரு புறமும் வெட்டுகின்றனர். ஏதாவது ஒரு பகுதியையாவது வெட்டாமல் விட்டு வைக்க வேண்டும். ஒரு பக்கத்தை விஸ்தரிப்பு செய்துவிட்டு, இன்னொரு புறத்தை விட்டு வைக்கலாமே?
பொன்னுசாமி, திருநெல்வேலி
போலீஸாரால் விபத்து
சாலைகளில் போலீஸார் திடீரென கை மறித்து வாகனங் களை நிறுத்தி லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்கின்றனர். எவ்வித முன் அறிகுறிகளும் இன்றி திடீரென நிறுத்துவதால், பின்னால் இருந்து வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.
குமார், நாங்குநேரி
புதிய மின்மாற்றி அமையுமா?
திருநெல்வேலி மாவட்டம் ஆவுடையானூர் அருகே ராயப்பனாடனூரில் போதிய டிரான்ஸ்பார்மர் வசதி இல்லை. இதனால் கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதன பொருட்களை பயன்படுத்தவே முடியவில்லை. புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும்.
நெல்சன், ஆவுடையானூர்
தெருவிளக்குகள் எரியவில்லை
செவலில் தெருவிளக்குகள் எரியவில்லை. மேலும், கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற சூழ்நிலை காணப்படுகிறது. இதனை களைய நடவடிக்கை தேவை.
சண்முகையா, செவல்
மோசமான பேருந்துகள்
திருநெல்வேலி மண்டல அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. இந்த விசயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
நாகராஜன், திருநெல்வேலி
எரியாத தெரு விளக்குகள்
கீழகடையம் ரயில் நிலைய சாலையில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கீழகடையம் வாசகர்
எல்ஐசி கவனிக்குமா?
எல்ஐசி பணம் செலுத்தியவர் களுக்கு பத்திரம் வழங்கப்படு கிறது. பின் பக்கத்தில் நிபந்தனைகள், அறிவுரைகள் மிகவும் சிறிய எழுத்துக்களில் உள்ளன. இதனை படிக்க முடியவில்லை. பெரிய எழுத்துக்களில் வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
ஆறுமுகம், வி.கே.புரம்
வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
காயல்பட்டினம் கூழக்கடை பஜாரில் உள்ள கடைகளுக்கு முன்பாக பொருட்களை வைத்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறை ஏற்படுத்துகின்றனர். இதனை சரி செய்ய நடவடிக்கை தேவை.
காயல்பட்டினம் வாசகர்
அலுவலர்களின் மெத்தனம்
தூத்துக்குடி தாலுகா அலுவல கத்தில் பணியாளர்கள் காலை 11 மணிக்கு தான் வருகின்றனர். இதனால் காலையில் இருந்தே காத்திருக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நவநீதகிருஷ்ணன், தூத்துக்குடி
முறையான ஆய்வு வேண்டும்
தொழிற்சாலைகளில் தொழிற் சாலை துறை ஆய்வாளர் உள் ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. தொழிற்சாலை களில் தொழிலாளர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதில்லை. கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் முறையாக இல்லை.
கணேசன், தூத்துக்குடி
சாலை படுமோசம்
தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் இருந்து எட்டயபுரம் சாலைக்கு செல்லும் சாலை படுமோசமாக உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும்.
தூத்துக்குடி வாசகர்
மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு
திருநெல்வேலி மாவட்ட குழந் தைகள் நலக்குழு உறுப்பினர் களை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. ஆனால், இதுவரை நியமிக்கப் படவில்லை. குழந்தைகள் பாது காப்பு விசயத்தில் அலட்சியம் கூடாது. உடனே உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்.
முத்துராமன், நெல்லை டவுன்
வெற்று காகித ரசீது
ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தபின் கிடைக்கும் ரசீதுகளில் எந்த விவரமும் அச்சிடப்படாமல் வெற்று காகிதமாக வருகிறது.
பாளையங்கோட்டை வாசகர்
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT