Published : 25 Nov 2016 11:34 AM
Last Updated : 25 Nov 2016 11:34 AM
பாதாள சாக்கடை வேண்டும்
மாடம்பாக்கம் பாரதிநகர் சர்ச் சாலையில் சில வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அவ்வழியாக செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்தி, தெருக்களில் கழிவுநீர் விடுவதைத் தடுக்க வேண்டும்.
- வாசகர், மாடம்பாக்கம்.
தார் சாலை அமைக்கப்படுமா?
பழைய பெருங்களத்தூர் பகுதியில் கடந்த மே மாதம் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, முதலில் கற்சாலை அமைக்கப்பட்டது. அதன் மீது தார் சாலை அமைக்க வேண்டும். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலைகளில் வாகனங்களில் செல்ல சிரமமாக உள்ளது. எனவே இப்பகுதியில் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
- வாசகர், பழைய பெருங்களத்தூர்.
பள்ளத்தில் காவல் நிலையங்கள்
சென்னை வேளச்சேரி மற்றும் ஆதம்பாக்கம் காவல் நிலையங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இப்பகுதியில் சாலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டதால், தற்போது காவல் நிலையங்கள் பள்ளத்தில் உள்ளன. மழை காலத்தில் காவல் நிலையங்களைச் சுற்றி 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்குகிறது. இதனால் காவல் நிலையம் செல்லும் காவலர்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே காவல் நிலைய கட்டிடங்களை இடித்து விட்டு, உயர்த்தி கட்ட வேண்டும்.
- பி.வி.நீலமேகம், வேளச்சேரி.
வாகனம் நிறுத்த அதிக கட்டணம்
பல்லாவரம் பகுதியில் நடத்தப்படும் காய்கறி சந்தை அருகில் வாகனங்களை நிறுத்தினால், அதற்காக ரூ.30 வாகன நிறுத்த கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அவர்கள் வழங்கும் ரசீதில் பல்லாவரம் நகராட்சியின் முத்திரையும் இல்லை. இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதியில் வாகன நிறுத்த கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.
- என்.நாகராஜன், பொழிச்சலூர்.
டீலக்ஸ் பஸ் நிற்பதில்லை
பல்லாவரம் ஆடுதொட்டி பகுதியில் பள்ளிகள், வங்கிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. ஆனால் இப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் டீலக்ஸ் பஸ்கள் நிற்பதில்லை. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகளும், முதியோரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதிக்கு செல்ல 2-க்கும் மேற்பட்ட பஸ்களில் ஏற வேண்டியுள்ளது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் டீலக்ஸ் பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.ஷாஜூதீன், பல்லாவரம்.
கூடுதல் பஸ் வசதி வேண்டும்
திருவள்ளூர் மாவட்டம் தக்கோளம் பகுதியைச் சுற்றி 15 கிராமங்கள் உள்ளன. தக்கோளம்- திருவாலங்காடு இடையே அதிகாலை 5 மணிக்கு ஒரு பஸ்ஸும் இரவு 7 மணிக்கு ஒரு பஸ்ஸும் மட்டுமே இயக்கப்படுகின்றன. போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் ஷேர் ஆட்டோக்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு இது அதிக செலவை ஏற்படுத்துகிறது.
- எஸ். சங்கர், தக்கோளம்.
கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு
திருவள்ளூர் மாவட்டம், அன்னனூர் ஊராட்சியில், பிள்ளையார் கோயில் தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதைச் சிலர் ஆக்கிரமித்து, கழிவுநீர் செல்லாதவாறு அடைப்பை ஏற்படுத்தி உள்ளனர். கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கால்வாய் மீது உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வாசகர், அன்னனூர்.
சிற்றுந்து சேவை நீட்டிக்கப்படுமா?
அயனாவரம்- அமைந்தகரை இடையே எஸ்55 என்ற எண் கொண்ட சிற்றுந்து இயக்கப்பட்டு வருகிறது. இதை கோயம்பேடு வரை நீட்டிக்க வேண்டும். இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கோயம்பேடு சென்றுவர வசதி கிடைக்கும். மேலும், இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம், என்.எஸ்.கே நகர் பகுதி மக்களும் பயனடைவர். மேலும் இந்த வழித்தடத்தில் சிற்றுந்தில் மக்கள் கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் சிற்றுந்துகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.
- மணிவண்ணன், அண்ணாநகர்- கிழக்கு.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT