Published : 02 Nov 2016 11:30 AM
Last Updated : 02 Nov 2016 11:30 AM
கோவை அரசு தாழ்தள சொகுசுப் பேருந்துகளின் ஆபத்துப் பயணம்: அச்சம் தெரிவிக்கும் பயணிகள்
கோவை மாநகரில் இயக்கப்படும் சொகுசுப் பேருந்துகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால், தினமும் ஆபத்தான பயணத்தையே மேற்கொள்ள வேண்டி இருப்பதாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகரில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏராளமான தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் உக்கடம் கிளையில் இருந்து இயக்கப்படும் பல பேருந்துகள் முறையான பராமரிப்பு ஏதுமின்றி விபத்துகளுக்கு வழிவகுப்பது போல இருப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்பனா என்பவர் ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பதிவில் தெரிவித்ததாவது:
பொள்ளாச்சியில் இருந்து கோவை கணபதில் உள்ள தாயார் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருகிறேன். உக்கடத்தில் இருந்து அரசுப் பேருந்து வழித்தட எண் 3-ன் மூலம் கணபதிக்கு செல்வது வழக்கம்.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு தாழ்தள சொகுசுப் பேருந்துகள் எதுவுமே நல்ல நிலையில் இல்லை. தீபாவளியன்று நான் உக்கடத்தில் ஒரு பேருந்தில் ஏறினேன். அதில் ஓட்டுநர் அமர்ந்துள்ள பகுதியில் இருந்து இன்ஜின், கண்ணாடி ஆகியவை தனியே விலகியே சென்றன. இரண்டு பகுதிக்கும் இடையில் இடைவெளி விழும் அளவுக்கு அரசுப் பேருந்தின் பராமரிப்பு இருந்தது. அதேபோல பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் தளம், எப்போது வேண்டுமானாலும் கழன்று விழக்கூடிய நிலையில் ஆடிக் கொண்டிருந்தது.
சிறிய குழியோ, வேகத்தடையோ வந்தாலும் கூட மொத்த பேருந்தும் விபத்துக்குள் சிக்கும் சூழல் இருந்தது.
ஆனால் சொகுசுப் பேருந்து எனக் கூறி கூடுதல் கட்டணம் வசூலித்தார்கள். உடனே சம்பந்தப்பட்ட பணிமனையில் தகவல் தெரிவித்தேன். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து உக்கடம் பணிமனை பொறுப்பு அதிகாரி கூறும்போது, ‘இங்கு அந்த அளவுக்கு மோசமான சூழலில் எந்தப் பேருந்தும் இல்லை. சிறிய பிரச்சினைகள் தான் இருக்கும். அவற்றை உடனே சரி செய்து விடுகிறோம். அப்படி புகார் ஏதேனும் இருப்பின் பயணிகள் நேரடியாக போக்குவரத்துக் கழகத்துக்கு தெரிவிக்க முடியும்’ என்றார்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT