Published : 22 Nov 2016 11:35 AM
Last Updated : 22 Nov 2016 11:35 AM
கற்பித்தல் அல்லாத இதர பணிகளிலும் ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறார்கள்
பள்ளிகளில் ஆசிரியர்களைக் கற்பித்தல் அல்லாத இதர பணிகளிலும் ஈடுபடுத்துகிறார்கள் என்று ‘தி இந்து’ உங்கள் குரலில் பள்ளி ஆசிரியர் ஒருவர் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் சென்னையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
நான் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த 2 வாரங்களாக என்னால் வகுப் பில் வேலை செய்ய முடிய வில்லை. மாணவர்களின் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய வற்றை இன்னொரு பள்ளிக்குக் கொண்டு சென்று இ-சேவை மூலம் பதிவு செய்யும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். இதையெல்லாம் நான் செய்து கொண்டிருந்தால் மாணவர்களை எப்படி கவனிப்பது? அவர்களுக்கு எப்படி பாடம் நடத்த முடியும்? தற்போது, மாணவர்களை தேசிய அளவிலான தேர்வுகளுக்கு தயார் படுத்தும் வகையில் அவர்களுக்கு தினசரி மாதிரி தேர்வு நடத்தும்படி கூறியிருக்கிறார்கள்.
இருக்கின்ற பாடவேளைகளில் நாங்கள் பாடம் நடத்துவதா? அல் லது மாதிரி தாள் தேர்வு நடத்து வதா? அல்லது கற்பித்தல் அல்லாத இதர பணியைச் செய்வதா? பள்ளியில் எந்த வேலை வந்தாலும் ஆசிரியர்களிடமே கொடுத்து விடு கிறார்கள். இதனால், மாணவர் களைக் கவனித்துக் கொள்ள முடிய வில்லை. தினசரி கல்வித்துறைக் குப் பதில் சொல்லிக் கொண்டி ருப்பதே பெரிய வேலையாக இருக்கிறது. 8-ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்து விட்டதால் மாண வர்களும் ஆசிரியர்களை மதிப்ப தில்லை.
மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவே எங்களுக்கு நேரம் போதவில்லை. இதில், கற்பித்தல் அல்லாத இதர பணிகளையும் செய்யச் சொல்கிறார்கள். இந்த நிலையில், எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ சிறப்புப் பயிற்சிகள் வேறு. இதன் கார ணமாக மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் இந்த பெரும் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த ஆசிரியர் கூறினார்.
பள்ளிக்கல்வி அதிகாரி பதில்
ஆசிரியர்களைக் கற்பித்தல் அல் லாத இதர பணிகளில் ஈடுபடுத்து வது குறித்து எழுந்துள்ள இந்த புகார் குறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஆசிரியர்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளைத் தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன. ஆசிரியர்களைக் கற்பித் தல் அல்லாத இதர பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனினும், மாணவர்களின் நலன் சார்ந்த இதர பணிகளை ஆசிரியர்கள் கல்வி சார்ந்த பணிகளாகக் கருதி செய்வதில் தவறில்லையே” என்றார்.
உணவகங்களில் பிளாஸ்டிக் தாள் பயன்பாட்டை தடுக்க வேண்டும்
சென்னையில் உள்ள உணவகங்களில் பிளாஸ்டிக் தாள்கள் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும் என்று வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆர்.மணிவாசகம் கூறியதாவது:
சென்னையில் பல்வேறு உணவகங்களில், தட்டுகளைக் கழுவும் பணியைத் தவிர்க்கும் விதமாக, பிளாஸ்டிக் தாள் களைத் தட்டின் மீது போட்டு உணவைப் பரிமாறுகின்றனர். அந்த தாள்களை முறையாக அவர்கள் மறுசுழற்சிக்கும் அனுப்புவதில்லை. வெளியில் வீசிவிடுகின்றனர். பல உணவகங் களில் உணவுப் பொருட்களை பார்சல் செய்யவும் பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்தி வருகின் றனர். மேலும் இட்லி வேகவைக் கும் தட்டின் மீது துணியைப் போடாமல், பிளாஸ்டிக் தாள் களையே பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள் மறு சுழற்சி செய்யப்படாமல் எரிக்கப்படு வதாலும், நிலத்தில் புதைவதா லும், நிலத்தடி நீர் குறைந்தும், மண் மலடாகியும் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அந்த தாளின் மீது சூடான உணவுகளை வைத்து சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயை ஏற்படுத்தும் துகள்களையும் சேர்த்து நாம் சாப்பிடுவதாக பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன. அதனால் உணவகங்களில் பிளாஸ்டிக் தாள்களின் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக உணவு பாது காப்பு அதிகாரிகளிடம் கேட்ட போது, “நாங்கள் பல்வேறு உண வகங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். பிளாஸ்டிக் தாள்களைப் பயன்படுத்தும் உணவகங்களைக் கண்டறிந்து, அவற்றின் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்” என்றார்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT