Published : 22 Nov 2016 12:07 PM
Last Updated : 22 Nov 2016 12:07 PM
திருநெல்வேலியில் தற்போது மழை பெய்துவரும் நிலையில் பல இடங்களில் கழிவுநீரோடைகள் நிரம்பி வழிவதால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகள் குறித்தும், கழிவுநீரோடைகளில் இருந்து அள்ளிய கழிவுகளையும், மணலையும் அப்புறப்படுத்தாமல் இருப்பது குறித்தும், `தி இந்து’ நாளிதழின் `உங்கள் குரல்’ பகுதியில் திருநெல்வேலி வாசகர்கள் சிலர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.
மாநகராட்சி நிர்வாகம் தற்போது தனி அலுவலர் மற்றும் அதிகாரிகள் கையில் இருக்கும் நிலையில் அரசியல் தலையீடு இல்லாமல் அவர்கள் உடனுக்குடன் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக் கிறார்கள். திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயரும், தண்ணீர் பிரச்சினை தீரும் என்று அனைவரும் மழையை எதிர்பார்த்திருக்கும் நிலையில் மாநகரில் பல இடங்களிலும் கழிவுநீரோடைகளில் மழை நீரும், கழிவுநீரும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. இந்த கழிவுநீரோடைகளை வெயில் காலத்திலேயே தூர்வாரி செப்பனிட்டிருந்தால் மழைநீர் வழிந்தோட வழி ஏற்பட்டிருக் கும். ஆனால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட கிழக்கு பருவ மழைக்கான முன் னேற்பாடுகளை மாநகராட்சி நிர் வாகம் சரிவர மேற்கொள்ள வில்லை. கடந்த மழை காலத்தின் போது திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. மறுபடியும் மழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்பு களை தடுக்கும் வகையில் முன் னேற்பாடாக சாக்கடை கால்வாய் களை தூர்வாருதல், குப்பைகளை அகற்றுதல், சாலையோரங்களில் தேங்கியுள்ள மணல் மேடுகள் அகற்றுதல், தண்ணீர் வழிந்தோட முடியாத அளவுக்கு காணப்படும் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் செய்யவில்லை.
சமீபத்தில் மழை பெய்து பல்வேறு இடங்களிலும் சாக்கடை கள் நிரம்பி வழிந்துள்ள நிலை யில், ஒருசில இடங்களில் கழிவு நீரோடைகளில் இருந்து மணலை யும், தேங்கியுள்ள கழிவுகளையும் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழி யர்கள் ஈடுபட்டனர். ஆனால், அவர் கள் அவற்றை அள்ளி கரைகளில் வைத்துச் சென்றுவிட்டார்கள். இத னால் துர்நாற்றம் வீசுவதுடன், மீண் டும் மழைபெய்தபோது மழை நீரில் அவை கரைந்து கழிவு நீரோடைக்குள்ளேயே விழுந்துள்ளன.
பாளையங்கோட்டையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கும், பொதுமக்கள் நடந்து செல்லும் பேருந்து நிலைய போக்குவரத்து சிக்னல் அருகே அவ்வாறு கழிவு நீரோடையிலிருந்து அள்ளிய கழிவுகளையும், மணலையும் ஒரு வாரமாகவே அப்புறப்படுத்தாமல் விட்டுவிட்டனர். இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியைக் கடந்து செல்லும் பாதசாரிகள் மூக்கைபிடித்துக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.
வண்ணார்பேட்டையிலும் ஒருசில இடங்களில் இத்தகைய காட்சிகளை காணமுடிகிறது. கழிவு களை அள்ளி எடுத்து கரை யில் வைத்தபின், தண்ணீர் வடிந்த தும் அவற்றை அள்ளி அப்புறப் படுத்துவதில் உடனுக்குடன் நட வடிக்கை எடுக்க வேண்டும் என் பதே பொதுமக்களின் கோரிக்கை யாகும். தண்ணீர் வழிந்தோடும் வகையில் கால்வாய்களை தயார்படுத்தும் முக்கிய பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டால் மழை காலத்தில் வெள்ள பாதிப்புகளில் இருந்து திருநெல்வேலி மாநகரம் தப்பும் என்பது உங்கள் குரல் பகுதியில் வாசகர்களின் கருத்து.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT