Published : 30 Nov 2016 10:57 AM
Last Updated : 30 Nov 2016 10:57 AM
திருப்பூர் மாவட்டம் உடுமலை, தாராபுரம், மடத்துக்குளம், காங் கயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பதிவில் இடி கரை மணியகாரம்பாளை யத்தைச் சேர்ந்த வாசகர் தெரிவித்திருப்பதாவது:
உடுமலையில் நடந்த அரசு விழாவில் பேசிய ஆட்சியர், நியாயவிலைக் கடைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் 100 சதவீதம் வழங்கப்படுவதாக கூறியுள் ளார்.
ஆனால், கடைகளில் பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இருப்பு இல்லை என திருப்பி அனுப்புகின்றனர். 300 கிலோ பருப்புதான் வந்ததாக கூறும் ஊழியர்கள், முதலில் வருவோருக்கே வாய்ப்பு என்ற நிலையில் விநியோகிக்கின்றனர். கிடைக் காதவர்களுக்கு, அடுத்த மாதம் தான் விநியோகிக்கப்படும் என்கின்றனர்.
தேவையான அளவு விநியோ கிக்கப்படும் நிலையில், கடைகளில் நிலவும் தட்டுப்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல், உடுமலை யைச் சேர்ந்த பாலதண்டபாணி கூறியிருப்பதாவது:
உடுமலை - தாராபுரம் சாலை யில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்க வளாக நியாயவிலைக் கடைகளில், அடிக்கடி அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஊழியர்களிடம் கேட்டால், ஒதுக்கீடு குறைவாகவே வருவதால் இருப்பு இல்லை என்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தாராபுரத்தைச் சேர்ந்த ராஜாமணி கூறியிருப்பதாவது: தாராபுரம் நகர கூட்டுறவு பண்டக சாலைக்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளில், பொது மக்களுக்கு ஒதுக்கப்படும் பொருட்கள், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அட்டைதாரர்களுக்கு பொருட் கள் இருப்பு இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இதுகுறித்து ஏற்கெனவே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் கூறும்போது, “திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 1135 நியாயவிலைக் கடைகள் செயல்படுகின்றன. ‘பாய்ன்ட் ஆஃப் சேல்’ என்ற புதிய இயந்திரம் மூலமாக, குடும்ப அட்டையின் பதிவேடு எண்கள் பதிவு செய்யப்பட்டு, மின்னணு முறையில் அத்தியா வசியப் பொருட்கள் விநியோகிக் கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் ஆதார் எண், மொபைல் எண் ஆகியவையும் இணைக்கப்படும். குடும்ப அட் டைக்கு பொருட்கள் விநியோ கித்த உடன், என்னென்ன பொருட் கள் வழங்கப்பட்டுள்ளன என்ற விவரம் குறித்த குறுஞ்செய்தி, அந்த செல்பேசிக்கு அனுப்பப்பட்டுவிடும்.
இதன்மூலமாக, ஒருவரின் குடும்ப அட்டையைப் பயன் படுத்தி, மற்றொருவர் பொருட் கள் வாங்குவது தடுக்கப்படும். இதுவரை 756124 குடும்ப அட்டைகள் விவரம் பிஒஎஸ் இயந்திரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தேவைக்கு ஏற்ப, கடை களுக்கு அரிசி விநியோகிக்கப் படுகிறது. பொருட்களின் தேவை குறித்த பட்டியல், அந்தந்தக் கடைகள் மூலமாக பெறப்பட்டு, அதனடிப்படை யில் விநியோகம் நடைபெறுகிறது. இப்பணியும் ஆன்லைன் மூலமாக ‘அப்டேட்’ செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ள அலு வலகத்தில் இருந்தே எந்தக் கடைக்கு எவ்வளவு பொருட் கள் தேவை என்பதை ஆய்வு செய்து அனுப்புகின்றனர். ஒரு சில கடைகள் தவிர, பெரும் பாலான கடைகளில் தேவை யான பொருட்கள் தடையின்றி விநியோகிக்கப்படுகிறது. எதிர் வரும் நாட்களில், இக்குறைபாடு கள் எதுவும் எழாது” என்றார்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT