Published : 15 Nov 2016 10:43 AM
Last Updated : 15 Nov 2016 10:43 AM

உங்கள் குரல்: பல்லாவரம் பேருந்து நிலையத்தில் மூடப்பட்ட கழிப்பறையால் அவதி

சிறப்பாசிரியர்கள் நியமன அறிவிப்பு எப்போது?

ஓவிய ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பாசிரி யர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்று ‘தி இந்து’ உங்கள் குரலில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த வாசகர் வி.அண்ணாமலை ‘உங் கள் குரல்’ சேவையில் கூறியதாவது:

தையல், ஓவியம், இசை, உடற் கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,600 சிறப்பாசிரியர்கள் நியமனம் தொடர்பாக 6 மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளி யானது. சிறப்பாசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து தேர்வுக்கான பாடத்திட்ட மும் இணையதளத்தில் வெளியிடப்பட் டது. ஆனால் இன்னமும் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை. சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இதுதொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட்டு ஆசிரியர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கீழூர் கிராமத்தில் 4 மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை

திருப்போரூர் அடுத்த கீழூர் கிராமச் சாலைகளில் தெருவிளக்குகள் எரியவில்லை என வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வாசகர் ஒருவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக தெரிவித்ததாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது கீழூர் கிராமம். இங்குள்ள கிராமச் சாலைகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், 20-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகத்தினர் பராமரித்து வருகின் றனர். இந்நிலையில், கிராமச் சாலைகளில் பெரும் பாலான தெருவிளக்குகள் கடந்த 4 மாதங்களாக எரியவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தால், உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் மட்டுமே கிராமப் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும் எனக் கூறுவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கீழூர் கிராம மக்கள் கூறியதாவது:

தெருவிளக்குகள் எரியாததால், பள்ளி சென்று திரும்பும் மாணவிகள் மற்றும் கிராமப் பெண்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

இதுகுறித்து, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, ‘‘ஊராட்சி கிராமப்பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளை, சீரமைப்பதற்காக அதிகாரங்கள் தற்போதுதான் அதிகாரிகளிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன. கீழூர் கிராமத்தில் தெருவிளக்குகள் எரியாதது தொடர்பாக, ஊராட்சி செயலரிடம் விசாரித்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பல்லாவரம் பேருந்து நிலையத்தில் மூடப்பட்ட கழிப்பறையால் அவதி

பல்லாவரம் பேருந்து நிலையத்தில் கழிப்பறை மூடப்பட்டுள்ளதால் அதைப் பயன்படுத்த முடியாமல் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’ உங்கள் குரலில் வாசகர் ஒருவர் தெரிவித்ததாவது:

பல்லாவரம் பகுதியில் தாம்பரம் மற்றும் சென்னை செல்வதற்கான இரு பேருந்து நிலையங்கள் உள் ளன. இதில் சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துங்கள் நிறுத்தப் படும் நிலையம் கண்டோன்மென்ட் கட்டுப்பாட்டிலும் (ஆலந்தூர் தொகுதி), தாம்பரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்தப் படும் நிலையம், பல்லாவரம் நகராட்சி கட்டுப்பாட்டிலும் (பல்லா வரம் தொகுதி) இடம்பெற்றுள்ளன. தாம்பரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தும் நிலையம், இதற்கு முன்பு ஆலந்தூர் தொகுதியில் இருந்தது. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொது நிதியிலும் சேர்த்து பேருந்து நிலையம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டன.

பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட வுடன் கழிப்பறை, மாநகர பேருந்து மாதாந்திர பயணச்சீட்டு அலுவலகமாக மாற்றப்பட்டது. அப்போது பொதுமக்கள் எதிர்த்த தால், அம்முயற்சி கைவிடப்பட்டது.

ஆனாலும் தற்போது பல்லாவரம் பேருந்து நிலையத்தில் கழிவறை இல்லாமல், பயணிகள் இயற்கை உபாதைகளைத் திறந்தவெளியில் கழிக்க வேண்டியுள்ளது. பேருந்து நிலையத்தில், கழிப்பறை இல்லா ததால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள் என்றார்.

இது குறித்து பல்லாவரம் நக ராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘கழிப்பறை கட்ட நகராட்சி தயாராக உள்ளது. ஆனால் போதிய இடவசதி இல்லை. தற்போது பேருந்து நிலையம் அருகே மேம் பாலம் கட்டும் பணி நடந்து வருகி றது. அப்பணி முடிந்தவுடன் கழிப் பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x