Published : 21 Nov 2016 11:52 AM
Last Updated : 21 Nov 2016 11:52 AM

உங்கள் குரல்: பூதப்பாண்டி வனச்சரக அலுவலக வளாகத்தில் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

பொதுநல ஆர்வலர்கள் வேதனை

சுற்றுச்சூழலை பாதிக்கும் கருவேல மரங்களை ஒழிக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டு வரும் அதே வேளையில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலக வளாகத்தில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு மட்டுமின்றி தன்னார்வலர்களும் சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் முயற்சியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

அடர்ந்து வளர்ந்துள்ளன

குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தரிசாக கிடக்கும் பகுதிகளில் கருவேல மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றை பொதுநல ஆர்வலர்கள், இளைஞர்கள் சிறிது சிறிதாக அகற்றி வருகின்றனர்.

ஆனால் ஆரல்வாய்மொழியில் உள்ள பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்தின் முகப்பில் வரிசையாக சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த மரங்களை அகற்றி பயன்தரும் மரங்களை வனச்சரக அலுவலகத்தில் நடவேண்டும் என, வள்ளியூரை சேர்ந்த பசுமை கரங்கள் அமைப்பினர் ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதியில் கருத்தை பதிவு செய்திருந்தனர்.

அதில், கருவேல மரங்களால் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்திற்கு ஏற்படும் கேடுகள் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத் தில் கிராமங்கள்தோறும் இம்மரங்களை ஒழிக்கும் முயற்சியில் இளைஞர்கள், தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். கருவேல மரங்களை அழிக்கும் முயற்சியை மேற்கொள்ளுமாறு உயர் நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இயற்கையை காக்கும் வன அலுவலக முகப் பிலேயே சீமைக் கருவேல மரங்கள் நிற்பது வருத்தமளிக்கிறது.

பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி பயனுள்ள தேக்கு மற்றும் ஆக்சிஜனை அதிகமாக வெளிப்படுத்தும் புங்கு போன்ற மரங்களை வனத்துறையினர் நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, பசுமை கரங்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.

விரைவில் அகற்றம்

இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜி விஸ்வ நாதனிடம் கேட்டபோது,

‘கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கருவேல மரங்கள் குறைவாகவே உள்ளன. வனப்பகுதிகளில் பார்வையில் படும் கருவேல மரங்களை அகற்றி விட்டு பயனுள்ள மரங்களை நட்டு வருகிறோம். பூதப்பாண்டி வனச்சரக அலுவலக வளாகத்தில் நிற்கும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. வளாகத்தின் உட்பகுதியில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வேறு மரங்களை அதிகளவில் நட்டுள்ளோம். அலுவலகத்தின் முகப்பு பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் விரைவில் அகற்றப்பட்டு, இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையில் பயனுள்ள மரங்கள் நடப்படும்’ என்றார் அவர்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x