Published : 29 Nov 2016 10:15 AM
Last Updated : 29 Nov 2016 10:15 AM

உங்கள் குரல்: பாதுகாப்பில்லாத சிதறால் மலைக்கோயில்

மத்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்குமா?



கன்னியாகுமரி மாவட்டத்தில் வர லாற்று சிறப்புமிக்க சிதறால் மலைக்கோயிலில் சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இப்பிரச்சினையால் முக்கியத்துவம் இழந்து வரும் சுற்றுலா மையங்களின் முதன்மை பட்டியலில் இக்கோயில் உள்ளது.

அருமனை அருகே உள்ள மலைப்பகுதியில், 1,500 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட சமண மதக்கோயில் இது. கன்னியாகுமரி வரும் வட இந்தியர்கள் அதிகளவில் இங்கு வருகை புரிந்தது உண்டு.

தாமிரபரணி ஆற்றின் இயற்கை கொஞ்சும் அழகு, தேங்காப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்தோடு ஒட்டிய அரபிக்கடலின் எழில்மிகு தோற்றம் போன்றவை சிதறால் மலைக் கோயிலில் இருந்து பார்ப்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும்.

கடந்த 10 ஆண்டுகளாக குற்ற நிகழ்வுகள் அதிகம் நடை பெறும் பகுதியாக சிதறால் மாறி யிருப்பதால், இங்கு பாது காப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் சுற்றுலா பயணி கள் வருகை பெருமளவு குறைந்து விட்டது.

சுற்றுலா பேருந்து

`தி இந்து’வின் `உங்கள்குரல்’ சேவையில், திருவிதாங்கோடு வாசகர் ஜெபகர்சாதிக் கூறியிருப் பதாவது: சமணர்களின் பழமையான வழிபாட்டுத் தலமாக சிதறால் மலைக்கோயில் உள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன் வரை, இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல உதவியாக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்தை இயக்கி வந்தது. கன்னியாகுமரியில் புறப்படும் இந்த பேருந்து சுற்றுலாத் தலங்களான வட்டக்கோட்டை, பத்மநாபபுரம், திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம், சிதறால் மலைக்கோயில், முட்டம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தது. அந்த பேருந்து தற்போது இயக்கப்படவில்லை.

பாதுகாப்பில்லை

சிதறால் மலைக்கோயிலுக்கு வரலாற்று ஆராய்ச்சிக்காக வரும் மாணவ, மாணவிகளுக்கு கூட பாதுகாப்பில்லை. அங்கு சுற்றித்திரியும் மர்மகும்பலால் பெண்கள் மிரட்டப்படுவதும், பாலி யல் தொல்லைகளுக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து வசதியும் இல்லாததால், சுற்றுலா முக்கியத்துவத்தை சிதறால் மலைக்கோயில் இழந்து வருகிறது. இக்கோயிலையும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளையும் பாதுகாக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சுற்றுலாத்துறை விளக்கம்

இதுகுறித்து சுற்றுலாத் துறையி னரிடம் கேட்டபோது, ``சிதறால் மலைக்கோயில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

கோயிலை பழமை மாறாமல் பாதுகாப்பது குறித்து பரிந்துரை செய்துள்ளோம். அருமனையை அடுத்த வெள்ளாங்கோடு ஊராட்சியின் கீழ் சிதறால் உள்ளது. அருமனை போலீஸார் தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகள் இங்கு அச்சமின்றி சென்றுவரும் வகையில் ஏற்பாடுகள் செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, சுற்றுலாத்துறை பரிந்துரை செய்து வருகிறது” என்றனர்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x