Published : 25 Nov 2016 12:10 PM
Last Updated : 25 Nov 2016 12:10 PM
காற்றில் பறக்கும் உத்தரவு
நாகர்கோவிலில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை யாரும் பின்பற்றுவதில்லை. இதனை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேஷ்குமார், நாகர்கோவில்
குடிநீரில் சாக்கடை கலப்பு
பாளையங்கோட்டையில் பல இடங்களில் குடிநீருடன் சாக்கடை கலந்து வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சியில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
திலிப், பாளையங்கோட்டை
பேருந்து முறையாக இயக்கப்படுமா?
வள்ளியூரிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் தடம் எண் 59 ஏ வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வேதநாயகம், எஸ்.எஸ்.புரம்
தரமில்லா சாலைப்பணி
நாங்குநேரி- திசையன்விளை சாலை விரிவாக்கம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தரமாக நடைபெறவில்லை. சாலையை தரமாக அமைக்க வேண்டும்.
துளசிமணி, சுப்பிரமணியபுரம்
சுகாதார சீர்கேடு
தூத்துக்குடி 39-வது வார்டில் சாலைகளை குப்பைத் தொட்டிகளாக மாற்றியுள்ளனர். இதனால் மழைக் காலத்தில் சுகாதார சீர்கேடு உருவாகியிருக்கிறது.
செந்தில்குமார், தூத்துக்குடி
கேபிளுக்கு அதிக கட்டணம்
பாளையங்கோட்டையில் கேபிள் டிவி கட்டணம் ரூ.130 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து கேட்டதால் கேபிள் டிவி இணைப்பை துண்டித்துவிட்டனர். புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
கார்த்திக், பாளையங்கோட்டை
பாழாகும் விளையாட்டு திடல்
பாளையங்கோட்டை அண்ணாநகரில் விளையாட்டு மைதானம் பாழ்பட்டிருக்கிறது. இங்குள்ள கிணற்றில் விலங்குகள் விழுந்து இறந்துகிடப்பதால் சுகாதார சீர்கேடு உருவாகியிருக்கிறது.
சாமுவேல்ராஜ், அண்ணாநகர்
பேருந்து நிலையத்தில் தொல்லை
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பாலியல் தொழிலாளர்களின் தொல்லை அதிகரித்திருக்கிறது. இதை போலீஸார் கண்டுகொள்ளவில்லை.
நாகர்கோவில் வாசகர்
சுகாதார சீர்கேடு
திருநெல்வேலி மாநகராட்சி 1-வது வார்டில் தேனீர் குளம் பகுதியில் சேறும் சகதியும் தேங்கி நிற்கிறது. கொசுத் தொல்லையும் அதிகம் உள்ளது. வடிகால் வசதி இல்லை. துப்புரவு பணியாளர்கள் வருவதே இல்லை.
தச்சநல்லூர் மக்கள் நல மன்றம்
மக்கள் சிரமம்
தூத்துக்குடியில் தீயணைப்பு நிலைய சாலை, மார்க்கெட், சர்ச் ரோடு பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு அப்படியே கிடக்கிறது. இதனால் சிரமங்கள் ஏற்படுகின்றன.
ஜோசப், தூத்துக்குடி
விபத்து அபாயம்
தூத்துக்குடி பைபாஸ் சாலையில் பாதசாரிகள் நடக்க முடியாத அளவுக்கு இரு ஓரங்களிலும் லாரிகளை நிறுத்தி வைக்கின்றனர். விபத்து அபாயமும் உள்ளது.
அருணாச்சலதேசிகன், வைகுண்டம்
நாய்கள் தொல்லை
கன்னியாகுமரி ரயில் நிலையம், பள்ளி மைதானங்களில் தெரு நாய்கள் அதிகமாக நடமாடுகின்றன. விரட்டி கடிப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
எஸ்.எம்.கலாம், கன்னியாகுமரி
தண்ணீர் தேங்கி அவதி
திருநெல்வேலி மாநகராட்சி பாட்டப்பத்து நியாயவிலைக் கடையை சுற்றி மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியவில்லை.
சுந்தர், பாட்டப்பத்து
குடிநீரில் கழிவுநீர்
தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெருவில் குடிநீர் குழாய் வால்வு, சாக்கடை கால்வாய்க்குள் உள்ளது. இதனால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. இதனைத் தடுக்க வேண்டும்.
முத்தையாபுரம் வாசகர்
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT