Published : 01 Nov 2016 12:36 PM
Last Updated : 01 Nov 2016 12:36 PM

உங்கள் குரல்: ராஜபாளையம் அருகே தெருவிளக்குகள் எரியாததால் அடிக்கடி விபத்து

திண்டுக்கல்லில் வடிகால் வசதி இல்லாததால் கோயில் சாலையில் தேங்கும் மழைநீர்

திண்டுக்கல்லில் நேற்று பெய்த சிறிய மழைக்கே அபிராமியம்மன் கோயில் சாலையில் வடிகால் வசதியில்லாமல் அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என ‘தி இந்து’ உங்கள் குரலில் பக்தர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அபிராமியம்மன் கோயில். சமீபத்தில் இந்த கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயி லைச் சுற்றி பேவர் பிளாக் கற்கள் மாநகராட்சி சார்பில் பதிக்கப்பட்டன. அப்போது மழைநீர் வழிந்தோட வடி கால் வசதி அமைக்கப்படவில்லை. திட்டமிடப்படாமல் பணி நடைபெற்ற தால் தற்போது சிறிய மழைக்கே கோயில் சாலையில் மழை நீர் தேங்கி பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத் துகிறது.

இப்பகுதியில் கடைவைத்துள்ள கணேசன் ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறியதாவது: மாநகராட்சி அலுவலர் கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது வடிகால் வசதி அமைத்து தந்தால் தான் மழைநீர் வெளியேற ஏதுவாக இருக்கும் என்று சொன்னோம். ஆனால் எங்களது திட்ட மதிப்பீட்டில் கோயிலைசுற்றி கற்கள் பதிக்கும் பணி மட்டுமே செய்ய மதி பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வடிகால் வசதி செய்ய முடியாது எனக் கூறி சென்றுவிட்டனர். தற்போது அளவாக பெய்த மழைக்கே மழைநீர் கோயிலின் முன்புற சாலையில் தேங்குகிறது. பலத்த மழை பெய்தால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்படும். கடைகளுக்குள் மழைநீர் புக வாய்ப் புள்ளது. இனியாவது மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் வடிகால் வசதி அமைத்து தர நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும் என்றார்.

ராஜபாளையம் அருகே தெருவிளக்குகள் எரியாததால் அடிக்கடி நடக்கும் விபத்துகள்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெரு விளக்குகள் எரியாததால் அடிக்கடி விபத்து நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

ராஜபாளையம் அருகே உள்ள தென்றல் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இப்பகுதி சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. மேலும், தெருவிளக்குகளும் சரியாக எரிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு நேரங்களில் தென்றல் நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தொடர்ந்து விபத்துகளில் சிக்குகின்றனர்.

இதுகுறித்து ‘தி இந்து’ உங்கள் குரலை தொடர்புகொண்டு தென்றல்நகர் பகுதியைச் சேர்ந்த திருமுகன் என்பவர் கூறிய தாவது: தென்றல் நகர் பகுதியில் சாலைகள் பல இடங்களில் மிகவும் மோசமாக உள்ளது. மேலும், தெருவிளக்குகளும் எரிவதில்லை. இதனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்று வருவது மிகுந்த சிரமமாக உள்ளது. திருட்டு, வழிப்பறியால் பெண்கள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். மாணவ, மாணவியர், வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜபாளையம் நகராட்சிப் பகுதியாக இருந்தாலும், விரிவாக்க பகுதியான தென்றல் நகர் அமைந்துள்ளது மேலபாட்டம் கரிசல்குளம் ஊராட்சி பகுதியாகும். தற்போது உள்ளாட்சி பதவிக்காலம் முடிவடைந்ததால், சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்றவற்றை ஊராட்சி பகுதியில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x