Published : 29 Nov 2016 10:09 AM
Last Updated : 29 Nov 2016 10:09 AM

உங்கள் குரல்: பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் தாமதமாகும் பாலம் கட்டுமானப் பணி

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்ல பாலக்காடு சாலை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கருமாபுரம் அருகே கிருஷ்ணா ஓடையின் மீது கட்டப்பட்ட பாலம் வலுவிழந்தும், குறுகிய அகலம் கொண்டதாகவும் இருந்ததால், கனரக வாகனங்கள் சென்று வர பெரும் சிரமம் ஏற்பட்டது இதையடுத்து கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 33 மீட்டர் நீளமும், 10.5 மீட்டர் அகலமும் கொண்ட புதிய மேம்பாலம் கட்டும்பணியை நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர். இந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் பல்வேறு இழுபறிகளுக்கு நடுவே நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பாலம் கட்டும் பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பதிவில் உமா மகேஸ்வரி கூறியிருப்பதாவது: பொள்ளாச்சியில் இருந்து கொழிஞ்சாம்பாறை வழியாக பாலக்காடு செல்லும் சாலையில் கருமாபுரம் அருகே கிருஷ்ண குளத்தின் ஓடையின் மீது பாலம் அமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் மாற்றுப்பாதை இல்லாமல், மண்ணூர், பொன்னாயூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சபரிமலையில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் பல கி.மீ. சுற்றி பொள்ளாச்சிக்கு வர வேண்டியுள்ளது. பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் பாலமுரளி கூறும்போது, ‘பாலத்தின் கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டன. பாலத்தின் தூண்கள் அமைக்கும் பணிக்காக பாறைகளை உடைக்க வெடிமருந்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. வெடிமருந்து வெடிக்க அனுமதி அளிக்க 4 மாதங்கள் காலதாமதம் ஏற்பட்டதால், வேலையில் தாமதம் ஏற்பட்டது. தற்போது புதிய பாலத்துக்கும் பழைய சாலைக்கும் இடையே இணைப்பு தார் சாலை அமைக்கும் பணி மட்டுமே மீதமுள்ளது. ஒரு வாரத்தில் பாலத்தின் 100 சதவீத வேலைகள் முழுமை பெறும்’ என்றார்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x