Published : 29 Nov 2016 10:16 AM
Last Updated : 29 Nov 2016 10:16 AM

உங்கள் குரல்: திருப்புவனம் பேரூராட்சி குடியிருப்பு பகுதிக்குள் தேங்கும் கழிவுநீர்

பன்றிகளால் சுகாதாரக்கேடு

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் பேரூராட்சியில் குடி யிருப்பு பகுதிக்குள் காலி இடத்தில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதில், கழிவுநீரில் இரைதேடும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘தி இந்து’ உங்கள் குரலில் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 18-வது வார்டு சேதுபதி நகரில் புதிதாக குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இங்கு அரசு ஊழியர்களே பெரும்பாலும் புதிதாக வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர். பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் தவறாது செலுத்தியும் இங்கு அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளதாக உங்கள் குரல் மூலம் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சேதுபதி நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் கூறியது: எங்கள் குடியிருப்பு பகுதியில் காலி இடங்களில் சேதுபதி நகரின் ஒட்டுமொத்த கழிவுநீரும் வந்து கலக்கின்றன. பெருமாள் கோயில் இடத்தில் சேகரமாகும் கழிவுநீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பலமுறை புகார்கள் தெரிவித்தும் அதிகாரிகள் இவற்றைக் கண்டு கொள்ளவில்லை. கழிவு நீரில் பன்றிகள் புரண்டு விளை யாடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கொசுத் தொல்லையும் அதிகரித்து குழந்தைகள், சிறுவர்களுக்கு அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஏற்கெனவே இப்பகுதியில் குடியிருந்த பள்ளி மாணவி ஒருவருக்கு டெங்கு பாதித்து உயிரிழந்தார். தற்போது அந்தக் குடும்பத்தினர் காலி செய்துவிட்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்ட னர்.

தற்போது, இதுபோன்ற சுகா தாரக்கேடுகளால் மலேரியா, டைபாய்டு, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்காமல் சுகாதாரக்கேடு ஏற்படாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபால் கூறுகையில், ஏற்கனவே புகார் வந்துள்ளது. அதனை அப்புறப்படுத்துவதற்காக துப் புரவு மேற்பார்வையாளரிடம் தெரிவித்துள்ளோம். சில நாட்களில் அங்கு பணி நடைபெறவுள்ளன என்றார்.

திருப்புவனம் பேரூராட்சி சேதுபதி நகரில் காலி இடங்களில் சேகரமாகும் கழிவுநீரால் அப்பகுதி சிறுவர்கள் அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகி வருகின்றனர்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x