Published : 29 Nov 2016 10:03 AM
Last Updated : 29 Nov 2016 10:03 AM

உங்கள் குரல்: ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி?

93 வயது முதியவருக்கு ஓய்வூதியம் நிறுத்திவைப்பு

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த எஸ்.கவுரி என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது:

எனது உறவினர் வேணு கோபால் என்பவர் ரயில்வே துறை யில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் தனது ஓய்வூதியத்தை செங்கல்பட்டில் உள்ள இந் தியன் வங்கி கிளையில் பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சென்னையை அடுத்த நங்கநல் லூரில் குடிபெயர்ந்தார்.

இதை யடுத்து, அவர் தனது வங்கிக் கணக்கையும் நங்கநல்லூர் இந்தியன் வங்கிக் கிளைக்கு மாற்றினார். தற்போது அவருக்கு 93 வயதாகிறது. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார்.

இந்நிலையில், அவர் வங் கிக்கு நேரில் வந்து உயிருடன் இருப்பதற்கான வாழ்நாள் சான்றி தழை அளித்தால்தான் ஓய்வூதியம் தருவதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எழுந்து நடக்கவே முடியாத நிலையில் உள்ள அவர் எவ்வாறு வங்கிக்குச் செல்ல முடியும்.

எனவே அவரை வங்கி அதிகாரிகள் நேரில் வீட் டுக்கு வந்து சந்தித்து உயிருடன் உள்ளார் என்பதை உறுதி செய்துவிட்டு, பின்னர் அவருக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கவுரி கூறினார்.

இதுகுறித்து, இந்தியன் வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “உடல் நலம் பாதிக்கப் பட்டு வங்கிக்கு வர முடியாத ஓய் வூதியதாரர்கள் அவர்கள் உயிரு டன் உள்ளனரா என்பதை அறிந்து கொள் வதற்காக வங்கி தரப்பில் இருந்து ஊழியர் ஒருவர் அவரது வீட்டுக்கு அனுப்பப்படுவார். அவர் அங்கு சென்று ஆய்வு செய்து சான்றளிப்பார். இல்லையென் றால் சம்பந்தப்பட்ட நபர் உயிருடன் இருப்பதை உறுதிசெய் யும் வகையில் மருத்துவரிட மிருந்து சான்று வாங்கி அவரது உறவினர்கள் வங்கியில் அளித் தாலும் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்” என்றார்.

ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி?

திருநின்றவூரைச் சேர்ந்த வி.ஜமுனா, ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக கூறியதாவது: அண்மையில் நான் எனது இரு குழந்தைகளுக்குப் பதிவு செய் திருந்த ஆதார் அட்டைகள் தற்போது கிடைத் துள்ளன. ஆதார் பதிவின்போது, நாங்கள் கொடுத்தபடி குழந்தைகளின் பெயர்கள் மற் றும் இனிஷியல், அந்த ஆதார் அட்டை யில் இடம்பெறவில்லை. பிழையாக இடம் பெற்றுள்ளன. தற்போது குடும்ப அட்டையு டன் ஆதார் எண்களை இணைக்க அரசு அறிவுறுத்தி வருவதால், பிழையாக உள்ள ஆதார் அட்டைகளை இணைக்க முடியவில்லை. உடனடியாக ஆதார் அட்டை விவரங்களைத் திருத்த வேண்டியுள்ளது. அதற்கு யாரை அணுகுவது என தெரியவில்லை என்றார்.

இது தொடர்பாக ஆதார் வழங்கும் யூஐடிஏஐ நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘எங்களது https://uidai.gov.in/ என்ற இணைய தளத்துக்குச் சென்று, ஆதார் அப்டேட் என்ற பகுதிக்குச் சென்று ஆன்லை னில் திருத்தம் செய்யலாம். அதிலுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதிலேயே கொடுக்கப்பட் டுள்ள முகவரிக்கு அனுப்பியும் திருத்தம் செய்யலாம். அப்பகுதியில் உள்ள ஆதார் பதிவு மையங்களுக்குச் சென்றும் திருத்தம் செய்யலாம். இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க, ஆதார் பதிவின்போதே பொதுமக்கள் எழுத்துகளைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

காஞ்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருவதாக, குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த 6 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் புகார் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் பல்வேறு விதமான வணிக நிறுவனங்களுக்கு, திருப்பாற்கடல் பகுதி மற்றும் பாலாற்றுப் படுகையில் ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் பெற்று குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏகாம்பரநாதர் சன்னதி தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு, குழாய்களில் சாக்கடை கலந்த குடிநீர் வருவதாக அப்பகுதிவாசிகள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

இதில், தனியார் தொலைபேசி நிறுவனம் பூமிக்கடியில் கேபிள்களை புதைப் பதற்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டி யதில், முதன்மை குழாய் சேதப்படுத்தப் பட்டுள்ளது தெரியவந்தது. இதை யடுத்து, மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதிவாசிகள் குடிநீருக்காக பல்வேறு இடங்களில் அலையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும். அதனால், உடைப்பினை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரப்பகுதிவாசிகள் ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவையில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சேகரிடம் கேட்டபோது: தனியார் நிறுவனத் தினரால் சேதப்படுத்தப்பட்ட குழாய் பகுதியைக் கண்டறி வதில், சிக்கல் ஏற்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது சீரமைப்புப் பணிகள் முடிந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றார்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x