Published : 01 Nov 2016 12:32 PM
Last Updated : 01 Nov 2016 12:32 PM

உங்கள் குரல்: நொச்சி நகரில் சமூக விரோதச் செயல்களை தடுக்க கோரிக்கை

ஆதார் இலவச தொலைபேசி சேவையில் தமிழில் தகவல் பெறுவதில் சிரமம்

ஆதார் இலவச தொலைபேசி சேவை மூலமாக தமிழில் தகவல் பெறுவதில் சிரமம் இருப்பதாக புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து வியாசர் பாடியைச் சேர்ந்த இளங்கோ, ‘தி இந்து’ உங்கள் குரல் வழியாக தெரிவித்ததாவது: ஆதார் பெறுவது குறித்து தகவல் பெற 1947 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்குமாறு செய்தித்தாள் களில் விளம்பரம் செய்யப்பட் டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் பேச எண் 2-ஐ அழுத்தவும் என்று ஆங்கிலத்தில் கூறுகிறது. ஆங்கிலத்தில் பேச எண் 3-ஐ அழுத்தவும் என்று தமிழில் கூறி குழப்புகிறது.

தமிழ்மொழி தொடர்பாளரும் கிடைப்பதில்லை

தமிழில் பேச எந்த எண்ணை அழுத்துவது என்று தெரிவிக்கப்படவில்லை. எண் 3-ஐ அழுத்தினால் தமிழில் தகவல் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு நிறுவன தொடர்பாளரிடம் பேச எண் 9-ஐ அழுத்தவும் என்றும் அதில் தெரிவிக் கப்படுகிறது. எண் 9-ஐ அழுத்தினால் தற்போது தமிழ்மொழி தொடர் பாளரைத் தொடர்பு கொள்ள முடியாது. அதனால் ஆங்கில மொழி தொடர்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவிக் கப்படுகிறது. இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பேச்சுகள் மூல மாகவே தெரிவிக்கப்படுகின் றன. இதனால் ஆதார் தொடர்பாக தமிழில் தகவல் பெறுவதில் சிரமமாக உள் ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார். இதுகுறித்து யுஐடிஏஐ நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

நொச்சி நகர் குடியிருப்புப் பகுதியில் சமூக விரோதச் செயல்களை தடுக்க கோரிக்கை

சென்னை நொச்சி நகர் குடியிருப்புப் பகுதியில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருவல்லிக் கேணியைச் சேர்ந்த சுரேஷ்குமார் ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி மூலம் கூறியதாவது:

கலங்கரை விளக்கம் அருகில் உள்ள தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய நொச்சி நகர் திட்டப் பகுதியில் ஏ,பி,சி,டி,இ என மொத்தம் 5 பிளாக்கள் உள்ளன. இவற்றில் தரைத்தளம் முழுக்க வாகன நிறுத்தும் இடமாக உள்ளது. இங்கு மின்விளக்குகளை அமைக்க வில்லை. இதனால், இங்கு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவது டன், அச்சத்துடனே இரவில் பெண்கள் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்தப் பகுதியில் மின்விளக்குகளை அமைத்துக் கொடுப்பதோடு, சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக மயிலாப்பூர் போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘அந்தப் பகுதியில் அவ்வப்போது ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகிறோம். மேலும், நொச்சி நகர் குடியிருப்பு பகுதியில் சமூக விரோதச் செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

குடிநீர் வசதி இல்லாத ரயில்வே பிளாட்பாரம்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே உள்ள காட்டாங்கொளத்தூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குடிநீர் வசதி இல்லை என்று ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் ரயில் பயணிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காட்டாங்கொளத் தூரைச் சேர்ந்த மாணிக்கம் என்ற வாசகர் கூறியதாவது:

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே அமைந்துள்ளது காட்டாங்கொளத்தூர். இங்குள்ள ரயில் நிலையத்தில், முதல் 2 நடைமேடைகளிலும் குடிநீர் வசதி உள்ளது. ஆனால், கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரயில்கள் வரும் 3-வது நடைமேடையில் 3 குடிநீர் குழாய்கள் இருந்தும் தண்ணீர் வசதி இல்லை. கடந்த 6 மாதங்களாக அந்த குழாய்களில் தண்ணீர் வரவில்லை.

இதுகுறித்து ரயில்வே துறைக்கு புகார் அனுப்பியதும் ஒருநாள் மட்டும் தண்ணீர் வந்தது. அதன் பிறகு முன்பு போலவே கடந்த 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை. 3-வது நடைமேடையில் மின்சார ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் தண்ணீர் குடிக்க வேண்டுமானால் தண்டவாளத்தின் குறுக்கே இறங்கி கடந்து, முதலாவது நடைமேடைக்கு செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே 3-வது நடைமேடையில் குடிநீர் வசதி செய்துகொடுக்க வேண்டும்.

இவ்வாறு மாணிக்கம் கூறினார்.

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x