Published : 15 Nov 2016 11:27 AM
Last Updated : 15 Nov 2016 11:27 AM

உங்கள் குரல்: சுருங்கிக்கொண்டே வரும் வைகை ஆற்றின் கரைகள்

ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு

வைகை ஆற்றின் கரைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி சுருங்கி வருவதால் தமிழக அரசு இந்த ஆற்றை மீட்டெடுக்க ஆற்றின் நிலத்தையும், கரைகளையும் சர்வே செய்ய வேண்டும் என ‘தி இந்து’ உங்கள் குரலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வைகை ஆறு வருஷநாடு மற்றும் மேகலை மலையின் அடர்ந்த வனப்பகுதியில் தோன்றி தேனி மாவட்டத்தில் பயணம் செய்து, திண்டுக்கல் மாவட்டத்தை தொட்டு, மதுரைக்குள் நுழைந்து சிவகங்கை வழியாக ராமநாதபுரம் மாவட்டம் செல்கிறது.

இந்த மாவட்டங்களில் வைகை ஆற்றின் மொத்த தூரம் 258 கி.மீ. இதன் பாசனப்பரப்பு 7,031 ச.கி.மீ. இதுதவிர மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் குடிநீர் தேவைகளிலும் இந்த ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது. தென்மேற்கு பருவமழையின்போது மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஏற்படும் அதிக மழைப்பொழிவு காரணமாக மட்டுமே வைகையில் கடந்த காலத்தில் தண்ணீர் வந்துள்ளது. ஆனால், சமீப காலமாக வடகிழக்கு பருவமழையின்போதே வைகை ஆற்றில் வெள்ளம் வருகிறது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றுவதால் வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதும் மாயமாகிவிட்டது.

இந்நிலையில் வைகையில் தண்ணீர் இல்லாமல் தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்டங் களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தற்போது வெறும் கழிவுநீர் மட்டுமே வருகின் றன. இது ஒருபுறம் இருக்கையில் தற்போது வைகை ஆற்றின் கரை களில் தனியார் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறியிருப்ப தாவது:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலை யில் இருந்து உற்பத்தியாகி ஒருங்கிணைந்த மதுரையின் சமவெளிகளை வளப்படுத்தி டெல்டா மாவட்டங்களை போல் நெல் அதிகமாக உற்பத்தியானது. கடந்த 25 ஆண்டாக வைகை ஆறு மிகப்பெரும் சீர்கேட்டைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தாகத்திற்கு குடிநீரையும், உணவுக்கு பாசன தண்ணீரையும் தந்த வைகையை காப்பாற்ற அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களும் அதை வலியுறுத்தாமல் கடமை மறந்து செயல்படுகின்றனர். அதனால், அரசியல் கட்சியினர், அதிகாரிகள், வைகையை தூய்மைப்படுத்தும் எண்ணத்தை கைவிட்டுவிட்டனர்.

தற்போது வைகைக்கு அச்சுறுத் தலாக இருப்பது, அதன் கரைகளை தனியார் ஆக்கிரமிப்பதுதான். தனியார் மட்டுமல்லாது, அரசும் போட்டிபோட்டு ஆக்கிரமிப்பு செய்கின்றனர். குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நகர்ப்புறங்களில் இந்த ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கிறது. வைகையின் கரையோரங்களில் முன்பு மண் சாலையே சென்றது. கடந்த கால் நூற்றாண்டாக நகர்ப்புறங்களில் தார்ச்சாலை போடப்பட்டது. சில இடங்களில் கரையோரங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. சில இடங்களில் வீடுகள் கட்டி விற்கப்பட்டன. அதனால், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வைகையின் வரைபடமும், தற் போது இருக்கும் வைகையின் அமைப்புக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.

வைகையின் கரைகள் பல இடங்களில் சுருங்கிவிட்டன. பல இடங்களில் சுருங்கிக்கொண்டே ஓடைபோல் மாறி வருகிறது. அதனால், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஒரு இயக்கமாக வைகையைப் பாதுகாக்கவும், கரைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அரசை வலியுறுத்த வேண்டும்.

தேனி மாவட்டத்தில் வைகை ஆறு தொடங்கும் இடத்தில் இருந்து முடியும் ராமநாதபுரம் மாவட்டம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x