Published : 25 Nov 2016 12:12 PM
Last Updated : 25 Nov 2016 12:12 PM

உங்கள் குரல்: தேனி அருகே அரசு மருத்துவமனையின் அவலம்

குண்டும் குழியுமான சாலை

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரை அடுத்த பிள்ளையார்குளம் அருகே லட்சுமியாபுரத்திலிருந்து பெருமாள்தேவன்பட்டி வரை உள்ள சாலை மிக மோசமாக சேதமடைந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, அப்பகுதியில் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

துள்ளுக்குட்டி, வில்லிபுத்தூர்.

ஷேர் ஆட்டோக்களால் பயணிகள் அவதி

மதுரை கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால் மாணவ, மாணவிகள் பேருந்துகளில் ஏற முடியவில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ராமநாதன், மதுரை.

அரசு மருத்துவமனையின் அவலம்

தேனி மாவட்டம், சின்னமனூரில் இயங்கும் அரசு மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் செவிலியர்கள் சரிவர வருவதில்லை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தேனிக்கு அனுப்பிவிடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு அவசர சிகிச்சை கூட கிடைக்க வில்லை.

நேதாஜி, சின்னமனூர்.

நிழற்குடை வசதி தேவை

விருதுநகர் ஆர்ஆர்.நகர், முக்கு ரோடு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வெளியூர் சென்று வருகின்றனர். ஆனால் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில், மழையில் தவிக்கின்றனர். எனவே, பயணி களின் நலன் கருதி இப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும்.

ஜெயராமன், விருதுநகர்.

பூங்காவில் முகம் சுளிக்கும் பெற்றோர்

மதுரையிலுள்ள ராஜாஜி பூங்காவில் மதிய நேரத்தில் சட்டத்துக்கு புறம்பான நிகழ்வுகள் நடக்கின்றன. இதனால் குடும்பத்துடன் வருபவர்கள் முகம் சுளிக்கின் றனர். எனவே, பூங்காவை முறையாகக் கண்காணித்து அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் வகையில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிமாறன், விருதுநகர்.

அழிக்கப்படாத சீமைக்கருவேல மரங்கள்

மதுரை திருவள்ளுவர் நகரில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து தண்ணீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சீமைக் கருவேல மரங்களை அழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

`நந்தீஸ்வரன், பழங்காநத்தம், மதுரை.

சாலையில் சிறுநீர் கழிப்பதால் அவதி

பெரியகுளம் வடகரையில் இருந்து தென்கரை செல்வதற்காக ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தில் அதிகமான வாகனங்கள் செல்வதால் பாதசாரிகள் நடந்து செல்ல இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைபாதையில் சிறுநீர் கழிப்பதாலும், குப்பைகளை கொட்டுவதாலும் துர்நாற்றம் வீசுகிறது.

வடகரையில் இருந்து தென்கரை செல்வதற்காக ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தில் அதிகமான வாகனங்கள் செல்வதால் பாதசாரிகள் நடந்து செல்ல இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைபாதையில் சிறுநீர் கழிப்பதாலும், குப்பைகளை கொட்டுவதாலும் துர்நாற்றம் வீசுகிறது.

பெரியகுளம் சுதாகர், பெரியகுளம்.

2 மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறை

விருதுநகர் நகராட்சி மணி நகரில் 2 மாதங்களாக 20 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது. குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதை உடனடியாக பழுது பார்த்து சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயா, விருதுநகர்

தேங்கும் கழிவுநீரால் நோய் அபாயம்

பரமக்குடி அருகே மெகந்தி கிராமத்தில் குளிப்பதற்காக குளியல் தொட்டி கட்டி யுள்ளனர். ஆனால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் குளியல் தொட்டியை சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் காய்ச்சல் ஏற்பட்டு கிராமத்திலுள்ளோர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சுரேஷ்குமார், மெகந்தி.

சாலையின் நடுவே பள்ளம்

மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் நாவினிப்பட்டி மந்தைத்திடல் அருகே சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. கீழையூரிலும் பல இடங்களில் இதேபோன்ற பள்ளங்கள் ஏராளமாக உள்ளன. எனவே, மேலூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜன், கீழையூர்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x