Published : 01 Nov 2016 12:46 PM
Last Updated : 01 Nov 2016 12:46 PM

உங்கள் குரல்: வேங்கிக்கால் ஊராட்சி- குண்டும் குழியுமான சாலை ஒருபுறம்; குவியும் குப்பை மறுபுறம்:

வேங்கிக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட வானவில் நகரில் குண்டும் குழியுமான சாலை ஒருபுறம்; குவியும் குப்பை மறுபுறம்: நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி

திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் ஊராட்சியில் வானவில் நகர் உள்ளது. நகர விரிவாக்கப் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. 1-வது, 2-வது தெருவில் சாலைகள் படுமோசமாக இருப்பதாகவும், காலி மனைகளில் குப்பை கொட்டப்படுவதாகவும், வாசகர் தேன்மொழி என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தனது புகாரை பதிவு செய்துள்ளார்.

மேலும், அவர் கூறியபோது, “வானவில் நகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். வானவில் நகரில் 2 ஆயிரம் பேர் வசிக்கிறோம். எங்கள் நகரில் முதலாவது மற்றும் 2-வது தெருவில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. அந்த தெருக்கள் வழியாகத்தான் எல்லோரும் செல்லவேண்டும். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் செல்வதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியுள்ளது.

2 தெருக்களிலும் உள்ள காலி மனைகளில் குப்பைக் கொட்டப் படுகிறது. அதில், 2-வது தெருவில் சற்று அதிகமாக உள்ளது. குப்பையை கொட்டி வருவதால், காலி மனை அருகே வசிப்பவர்கள் அவதிப்படுகின்றனர். மாதக் கணக்கில் குப்பை தேக்கமடைந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் தான் கொட்டுகிறார்கள் என்றால், துப்புரவுத் தொழிலாளர்களும் தள்ளுவண்டியில் கொண்டு வரும் குப்பையை காலி மனைகளில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.

குப்பையை நாய்கள் வெளியே இழுத்து வந்து போடுகின்றன. அதன் மீது நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், வீதிகளில் குப்பைத் தொட்டிகளை அதிக எண்ணிக்கையில் வைக்க வேண்டும். அதில், கொட்டப்படும் குப்பையை தினசரி அகற்றவேண்டும்” என்றார்.

இதுகுறித்து திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லட்சுமி நரசிம்மனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘வானவில் நகரில் உள்ள காலி மனைகளில் உள்ள குப்பையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சாலை போட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x