Published : 15 Nov 2016 11:43 AM
Last Updated : 15 Nov 2016 11:43 AM
வேலூரில் முக்கிய சாலையின் ஓரத்தில் கொட்டப்படும் குப்பையை துப்புரவுத் தொழிலாளர்கள் அடிக்கடி தீயிட்டு எரிக்கின்றனர். இதனால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதியில் மருத்துவர் அருள்பாரி என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, ‘‘வேலூர் லட்சுமி திரையரங்கில் இருந்து சங்கரன் பாளையம் செல்லும் பிரதான சாலையில் தனியாருக்குச் சொந்த மான இடம் உள்ளது. கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக் கப்படும் குப்பையை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக இந்த இடத்தில்தான் கொட்டுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக குப்பையை எடுத்துச் செல்லாமல் தீயிட்டு எரிக்கின்றனர். இங்கிருந்து குப்பையை அகற்ற சிரமப்படுகின்றனர். இதுதொடர் பாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாநகராட்சி அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தேன். அப்போது, மாநகராட்சி ஆணையாளராக இருந்த ஜானகி ரவீந்திரன், ‘குப்பை கொட்டும் இடத்தை பிஷப் டேவிட் நகருக்கு மாற்றிவிட்டதாக’ பதில் அனுப்பினார்.
ஆனால், தேசிய பசுமைத் தீர்ப் பாயத்துக்கு தவறான தகவலை தெரிவித்துவிட்டு மீண்டும் குப்பையைக் கொட்டி எரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதை ஆதாரத்துடன் புகைப் படம் எடுத்து மீண்டும் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு புகாராக தெரிவித் தேன். அந்த புகார் மீது விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் குப்பையை எரிக் கின்றனர். குப்பையில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் இருமல், சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நகரின் மையப்பகுதியில் குப்பையைக் கொட்டும் ஊழியர்களே இந்தப் பணியில் ஈடுபடுவது வேதனையாக இருக்கிறது’’ என்றார்.
இதுதொடர்பாக, வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் மணிவண்ணனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இது தொடர்பான புகார் எங்களுக்கு வந்துள்ளது. குப்பை பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்’’ என்றார்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT