Published : 29 Nov 2016 10:21 AM
Last Updated : 29 Nov 2016 10:21 AM
திருவாரூர் வடக்கு வீதியில் மயிலாடுதுறை சாலை பிரியும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் வேலா.செந்தில் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் வடக்கு வீதி சாலையும், மயிலாடுதுறை சாலையும் சந்திக்கும் பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகலானது. ஒரு புறத்தில் கோயிலும் மற்றொரு புறத்தில் கடைகளும் உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு, மற்றொரு புறத்தில் இருந்து என்ன வாகனம் வருகிறது என்பதை பார்க்க முடியாது. எனவே, இந்தச் சாலை வழியாக நகரத்துக்குள் செல்லும் அனைத்து வாகனங்களுமே அதிவேகமாக வந்து திரும்புகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. இந்தப் பகுதியைக் கடந்துதான் மயிலாடுதுறை தொடங்கி சென்னை வரை செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் வந்துசெல்கின்றன. இதனால் போக்குவரத்து மிகுந்த பகுதியாகவும் உள்ளது.புதுத்தெரு, 4 கால் மண்டபம், சேந்தமங்கலம், வண்டாம்பாளை உள்ளிட்ட திருவாரூரை ஒட்டிய பகுதிகளில் இருந்து திருவாரூருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து செல்லும் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் இப்பகுதி உள்ளது.
இதனைச் சமாளிக்க, போக்குவரத்துக் காவலர்கள் அவ்வப்போது கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
தற்காலிக தடுப்புகளை காவல் துறையினர் ஏற்படுத்தியுள்ள னர். இருப்பினும் இதனை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. இப்பகுதிக்கு வந்து செல்பவர்கள் அனைவரும் அச்சத்துடனேயே சாலையைக் கடக்க வேண்டியுள்ளது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT