Published : 21 Oct 2016 12:49 PM
Last Updated : 21 Oct 2016 12:49 PM

உங்கள் குரல்: மதுரையில் ஆபத்தான மின்கம்பங்கள்

குறுகலான சாலையால் அச்சம்

மதுரை மூன்றுமாவடியிலிருந்து அய்யர்பங்களா செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. போதிய மழைநீர் வாய்க்கால் மற்றும் தெருவிளக்கு வசதிகள் இல்லை. இரவு நேரங்களில் செல்ல மிகுந்த அச்சமாக உள்ளது.

ராமநாதன், மதுரை.

ஆபத்தான மின்கம்பங்கள்

மதுரை புது ஜெயில் சாலையில் சிறைச்சாலையின் எதிரில் அமைந்துள்ள மின்கம்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இதனை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், மதுரை.

கோயிலில் அடிப்படை வசதி தேவை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள புஷ்பவனேஸ்வரர் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலுக்கு வருபவர்களிடம் கட்டாய வசூல் செய்யப்படுகிறது. ஆனால் கோயிலில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இவற்றை சரி செய்தால் நன்றாக இருக்கும்.

சௌந்தர், மதுரை.

மணல் குவியலான சாலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் சாலையின் இருபுறமும் மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. சாலையில் உள்ள மணலை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.

மாரிமுத்து, ராஜபாளையம்

வாகன நிறுத்தமில்லாத காய்கறி மார்க்கெட்

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் வாகனங்கள் செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. எனவே, கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்வதற்கேற்ப போதிய இடவசதியை ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காளிதாஸ், மதுரை.

பெரிய லாரிகளால் சிரமம்

மதுரை அழகப்பன் நகர் அருகே உள்ள பாண்டியன் நகரில் மிக சிறிய சாலைகளில் பெரிய லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் வேறு வாகனங்கள் செல்ல முடியவில்லை. அவசரத்துக்குக்கூட யாரையும் அழைத்துச் செல்ல முடியவில்லை. எனவே இதுபோன்ற பகுதிகளில் மினி லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும்.

ரெங்கராஜன், மதுரை.

தெளிவற்ற பேருந்து டிஜிட்டல் பலகை

அரசு பேருந்துகளில் உள்ள பெயர் பலகைகளில் ஊர் பெயர், எண் முழுமையாக தெரியவில்லை. இரவு நேரங்களில் டிஜிட்டல் பலகை சரியாக இயங்காததால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை சரிசெய்ய போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

விஜய், மதுரை.

மோசமான சாலை

மதுரை மாவட்டம், பேரையூர் தேவாலயத்துக்கு அருகே சாலை மிக மோசமாக உள்ளது. சாலை அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெறாமல் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

தமிழ்கண்ணன், பேரையூர்.

மக்களை மிரட்டும் நாய்கள்

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி நகரில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவர்கள், பொதுமக்களுக்கு அச்சம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்து தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.

செல்லம், மதுரை.

அகற்றப்படாத பட்ட மரங்கள்

பழநி- தாராபுரம் சாலையில் பட்டுப்போன மரங்கள் அதிகளவில் உள்ளன. வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் மக்கள் மேல் மரங்கள் விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, பட்டுப்போன மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேஷாத்ரி, பழநி.

சீரமைக்கப்படாத சாக்கடை கால்வாய்

ராஜபாளையம் தாட்கோ காலனியில் சாக்கடை கால்வாய் சரியாக அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் ஒரே இடத்தில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வராஜ், ராஜபாளையம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.



உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x