Published : 21 Oct 2016 12:54 PM
Last Updated : 21 Oct 2016 12:54 PM

உங்கள் குரல்: நாகர்கோவில்- மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை

சுகாதார சீர்கேடு பாளையங்கோட்டை பொதிகை நகர் பிள்ளையார் கோயில் அருகே கால்நடைகள் அதிகள வில் இருப்பதால் சுகாதார சீர்கேடு உருவாகியிருக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

எஸ்.செல்லப்பாண்டியன், பொதிகைநகர்

ரயில்களில் தண்ணீர் இல்லை

தென்காசி- திருநெல்வேலி மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களில் கழிப்பறை சுத்தமாக இல்லை. மேலும், தண்ணீர் வசதி சரிவர இல்லை. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமது அலி, தென்காசி

சிதறால் கோயில் பராமரிக்கப்படுமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிதறால் மலைக்கோயில் வரலாற்று தகவல்கள் நிறைந்தது. இதை பராமரிக்க வேண்டும். இங்கு சென்று வருவதற்கு பஸ் வசதிகளை செய்துதர வேண்டும்.

ஜெகபர்சாதிக், திருவிதாங்கோடு

குரங்குகள் தொல்லை

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே சிறமடத் தில் பெருமாள் கோயிலுக்கு பக்தர்கள் அதிகம் வருகிறார் கள். இங்குள்ள சாலையை சீர மைக்க வேண்டும். மேலும், பூதப் பாண்டி பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரவீணா, பூதப்பாண்டி

பேருந்துகள் நின்று செல்லுமா?

திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் பேருந்து களில் காயல்பட்டினத்துக்கு பயணிகளை ஏற்ற நடத்துநர்களும், ஓட்டுநர்களும் மறுக் கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காயல்பட்டினம் வாசகர்

பிஎஸ்என்எல் சேவை குறைபாடு

நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் தொலைபேசி சேவை சரி இல்லை. பழுதானால் பார்ப்பதற்கு கூட ஒரு வாரம் கழித்தே தான் வருகின்றார்கள். பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

அப்துல் கபூர், நாகர்கோவில்

சாலை மிகவும் மோசம்

தூத்துக்குடி- திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் தூத்துக்குடி புறவழிச்சாலை மேம்பாலம் பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகழேந்தி மணியன், தூத்துக்குடி

சாலை சீரமைக்கப்படுமா?

தூத்துக்குடி தாளமுத்துநகர்- மாதா நகர் இடையே உள்ள சாலை மிகவும் சேதமடை ந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதிக்குள் ளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

ரமேஷ், தாளமுத்துநகர்

தெருவிளக்குகள் இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழிநிலை கிராமத்தில் தெருவிளக்கு இல்லாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகின்றனர். தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்டம்

தடை கற்கள் அமைக்கப்படுமா?

திருச்செந்தூர் சன்னதி தெருவில் மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்லாமல் தடுக்க தடைகற்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை வியாபாரிகள் எடுத்துவிட்டுள்ளனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தடைகற்களை மீண்டும் நிறுவ போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கர், திருச்செந்தூர்

பருப்புகள் கிடைப்பதில்லை

அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு முறையாக கிடைப்பதில்லை. பண்டிகை காலத்தில் ஏழை மக் களுக்கு உதவியாக இருக்கும் பருப்பு வகைகள் ரேஷன் கடை களில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கணபதிராமன், அம்பாசமுத்திரம்

பெயர் பலகை வேண்டும்

ராதாபுரம் கால்நடை மருத்துவ மனைக்கு பெயர் பலகை இல்லை. எனவே, பொதுமக்கள் இடம் தெரியாமல் வேறு இடங் களுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. பெயர் பலகை வைக்க வேண்டும்.

இசக்கியப்பன், ராதாபுரம்

மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை

நில அளவை தொடர்பாக அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்து 11 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேட்டால் ஆட்கள் இல்லை என்கின்றனர்.

சுப்பிரமணியன், நாகர்கோவில்.

பக்கிள் ஓடை தூர்வாரப்படுமா?

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் பாதியளவுக்கு மணல் நிரம்பியி ருக்கிறது. மழை காலம் வரும் முன் இந்த மணலை அள்ள வேண்டும்.

சதீஷ், தூத்துக்குடி

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x