Published : 18 Oct 2016 12:11 PM
Last Updated : 18 Oct 2016 12:11 PM
அண்ணாநகருக்கு மீண்டும் மின் ரயில் இயக்க கோரிக்கை
சென்னை அண்ணாநகர் மற்றும் பாடியில் கடந்த 2003-ம் ஆண்டு ரயில் நிலையங்கள் அமைக்கப் பட்டு மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்காக பல கோடி ரூபாய் செலவில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற் றுவோர் என்று பல்லாயிரக்கணக் கானோர் அந்த ரயில்களைப் பயன் படுத்தி வந்தனர்.
கடந்த 2006-ம் ஆண்டு பாடி மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியபோது, அதற்கு தூண்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக 2 ரயில் நிலை யங்களும் மூடப்பட்டன. அதன் பிறகு இந்த வழித்தடத்தில் ரயில் கள் இயக்கப்படவில்லை. இந்நிலை யில் இப்பாதையில் மீண்டும் ரயில் களை இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர் ஏ.ஜெய கிருஷ்ணன் கூறியதாவது: ரயில் போக்குவரத்து இல்லாததால் சிதிலமடைந்திருக்கும் அண்ணா நகர் ரயில் நிலையம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகி இருக்கிறது. எனவே, சென்னை சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து அண்ணாநகருக்கு மீண்டும் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு ரயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதினேன். அதற்கு, பதில் அளித்துள்ள ரயில்வே வாரியம் மீண்டும் மின்சார ரயில்கள் இயக்கவுள்ளதாகவும், அதற்கான கால அட்டவணையும் எனக்கு கடிதமாக அனுப்பியது. ஆனால், இதுவரை இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அண்ணாநகரில் இருந்து மின்சார ரயில்கள் இயக்குவது தொடர்பாக ஆய்வு பணிகள் நடந்து வரு கின்றன. ஆய்வு முடிவுகளைப் பார்த்த பின்னரே, மீண்டும் ரயில் கள் இயக்குவது குறித்து ரயில்வே வாரியம் அறிவிக்கும்’’ என்றார்.
மணிமங்கலத்தில் அனைத்து வசதிகளுடன் அரசுப் பள்ளி அமைக்கப்படுமா?
ஒரகடம் மணிமங்கலம் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளி அமைக்க வேண்டும் என்று வாசகர் ஒருவர் ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி சேவையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதா வது: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத் தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சியில் அரசினர் உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. மணிமங்கலம், புஷ்பகிரி, பாரதி நகர், இந்திராநகர், சேத்துப்பட்டு, மலைப்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 291 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த 2007-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 13 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். பள்ளியில் 3 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இந்தப் பள்ளி 5 சென்ட் நிலத்தில் இயங்கி வருகிறது. போதிய இடவசதி இல்லாமல், இடிந்து விழும் நிலையில் ஆபத்தான நிலை யில் உள்ள கட்டிடத்தில் மாணவர் கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு என்று தனித்தனியே கழிப்பறை வசதி இல்லை. விளையாட்டு மைதானமும் இல்லை. இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வேறு இடத்தில் விளையாட்டு மைதானத்துடன் கூடுதல் வசதிகளு டன் பள்ளிக்கு கட்டிடம் கட்ட கிராம பஞ்சாயத்து சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிக நிலப்பரப்பில் கூடுதல் வசதிகளுடன் பள்ளி கட்டிடம் கட்ட சில தனியார் மென்பொருள் நிறுவனங்கள் முன்வந்தன. இதற்கு தேவையான நிலத்தை பல ஆண்டுகள் ஆகியும் வருவாய்த் துறையினர் வழங்கவில்லை.அந்த சிறிய இடத்திலேயே தற்போது கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அரசு இதில் தலையிட்டு கிராம மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு வேறு இடத்தில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளியை அமைக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “மணிமங்கலம் அரசினர் உயர் நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப் பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் அதி காரிகளுக்கு கோரிக்கை வைக் கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. தனியார் அமைப்பு கட்டிடம் கட்ட முன் வந்தது. அதற்கு தேவையான நிலம் வருவாய்த் துறையிடம் கேட் கப்பட்டது. ஆனால் பல ஆண்டு கள் ஆகியும் அவர்கள் நிலம் வழங்கவில்லை. இதனால் 5 சென்ட் நிலத்தில் போதிய இட வசதி இல்லாமல் தற்போது கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு முன்வர வேண்டும்” என்றார்.
************
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் தொலைபேசி எண்கள்
சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT