Published : 24 Oct 2016 10:57 AM
Last Updated : 24 Oct 2016 10:57 AM
பிஎஸ்என்எல் நாகர்கோவில் தொலைதொடர்பு வட்டத்தில், சேவை குறைபாட்டுக்கு அந்தந்த பகுதிக்கு உட்பட்ட பிஎஸ்என்எல் அலுவலகங்களில் புகார் செய்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என, ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் நாகர்கோவிலை சேர்ந்த வாசகர் அப்துல் கபூர் புகார் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் அதிகம் உள்ளனர். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு தென் மாவட்டங்களில் அதிக லேண்ட் லைன் இணைப்புகள் உள்ள மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது.
வாடிக்கையாளர்கள் பாதிப்பு
இங்கு இணைப்புகளில் பிரச்சினைகள் ஏற்படும்போது பிஎஸ்என்எல் விரைந்து சீர் செய்வதில்லை. வாரக் கணக்கில் கூட ஆட்கள் பல நேரங்களில் வருவதில்லை. உறவினர்கள் வெளிநாடுகளில் வேலை செய்வதால், வீட்டு போனுக்கு தினசரி அழைப்புகள் வரும். சீரமைத்து தருவதில் மெத்தனம் காட்டுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வாடிக்கையாளர் சேவை மையத்தில் எப்போது தெரிவித்தாலும் இதோ வந்து விடுவார்கள் என்றே சொல்கின்றனர். அப்படியே அதிகாரிகள் வந்து பார்த்தாலும், புதிதாக வேலை செய்ய வேண்டியுள்ளது என்று சொல்லி கிடப்பில் போட்டுவிடுகின்றனர். பிஎஸ்என்எல் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
குறைகளை களைய வேண்டும்
மற்றொரு வாசகர் கூறுகையில், ‘பிஎஸ்என்எல் வீட்டு போன்களுக்கு அந்நிறுவனத்தில் இருந்தே அழைத்து, பிஎஸ்என்எல் டாட்காமில் இருந்து இலவசமாக பாடல்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று சொல்லி அதில் சேர்க்கின்றனர்.
ஆனால், தொலைபேசி கட்டண பில் வரும் போது அதற்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கின்றனர். தனியார் நிறுவனங்கள் பல சலுகை களையும் வாரி வழங்கும் நிலை யில், பிஎஸ்என்எல் இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும்’ என்றார் அவர்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT