Published : 25 Oct 2016 11:00 AM
Last Updated : 25 Oct 2016 11:00 AM

உங்கள் குரல்: திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 3 இடங்களில் குழாயில் உடைப்பால் 6 மாதமாக வீணாகும் குடிநீர்

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 3 இடங்களில் குழாயில் உடைப்பால் 6 மாதமாக வீணாகும் குடிநீர்: ‘உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் புகார்

திருவாரூர் நகராட்சிப் பகுதிக்குட்பட்ட 3 இடங்களில் நகராட்சி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், குடிநீரும் வீணாகி வருவதாக, ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் தங்க சேது தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, “நகராட்சிப் பகுதியில் 3 இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய குடிநீர் வீணாக தெருவிலும், கழிவுநீர் வாய்க்காலிலும் செல்வது குறித்து உரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும். 6 மாதத்துக்கும் மேலாக உள்ள குழாய் உடைப்புகளால், குடிநீர் விநியோகத்தின் வேகம் குறைந்து அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இது தொடர்பாக விசாரித்தபோது, பழைய நாகை சாலை மாரியம்மன் கோயில் தெருவில் தனியார் பார்சல் அலுவலகத்துக்கு அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதேபோல, கொடிக்கால் தெருவில் சிமென்ட் சாலை போடப்பட்டுள்ள பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தினமும் நகராட்சி மூலம் காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை குடிநீர் விநியோகம் நடைபெறும்போது, குடிநீரானது உடைந்த குழாய் வழியாக அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து வீணாகி வருகிறது.

இதேபோல, திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள தனியார் கலர் லேப் அருகிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வீணாவதுடன், வீடுகளுக்கு நடைபெற்றுவரும் குடிநீர் விநியோகத்தில் நீரின் வேகம் குறைந்து, நெய்விளக்கு தோப்பு பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, நகராட்சி ஆணையர் (பொ) பாலகங்காதரனிடம் கேட்டபோது, “நகரில், குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் குறித்து பார்வையிட்டு, அவற்றை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x