Published : 28 Oct 2016 11:59 AM
Last Updated : 28 Oct 2016 11:59 AM
சிதறால் கோயில் பாழ்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பழமையான சிதறால் மலைக்கோயில் பாழ்பட்டு இருக்கிறது. முன்பு இங்கு செல்வதற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது. இப்போது இயக்கப்படவில்லை.
ஜெகபர்சாதிக், திருவிதாங்கோடு
சுகாதார சீர்கேடு
செங்கோட்டை வட்டம் இலத்தூர் பகுதியில் பெண்கள் காப்பகம் உள்ளது. இதன் அருகில் அப்பகுதி மக்கள் குப்பை கொட்டுகிறார்கள். மேலும் திறந்தவெளி கழிப்பிடமாகவும் இப்பகுதியை மாற்றியிருக்கிறார்கள். இதனால் பெரும் சுகாதார சீர்கேடு உருவாகியிருக்கிறது.
மேகலா, இலத்தூர்
குடிநீர் தட்டுப்பாடு
சிவகிரி வட்டம் ராயகிரி பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் சுத்தப்படுத்தப்படாமல் இருக்கின்றன. மேலும் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மோகன், ராயகிரி
குளங்கள் ஆக்கிரமிப்பு
சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் முன் இரு குளங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டிவிட்டனர். இதனால் இந்த குளங்கள் இப்போது சுருங்கி ஓடைபோல் காட்சியளிக்கிறது.
ராஜா, சங்கரன்கோவில்
சாலை சீரமைக்கப்படுமா?
ராமலிங்கபுரத்திலிருந்து கோவில்பட்டிக்கு செல்லும் 2 கி.மீ. தூரமுள்ள சாலையில் 1 கி.மீ. தூரம் வரையில் தார் சாலை அமைத்திருக்கிறார்கள். 1 கி.மீ. தூரம் மண் சாலையாக இருக்கிறது. இதனால் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மகேந்திரன், ராமலிங்கபுரம்
சாலை படுமோசம்
திருநெல்வேலி பேட்டை செக்கடியில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலை, ம.தி.தா. இந்து கல்லூரி வரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
தனசேகரன், பாளையங்கோட்டை
பயனற்ற விளக்கு
பாளையங்கோட்டை மகாராஜாநகரில் தானியங்கி விளக்கு சுவிட்ச் அமைத்துள்ளனர். இது மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரை எரியும் வரை மட்டுமே அமைத்துள்ளனர். இதனால் இந்த விளக்கால் பயனில்லை.
துரைசாமி, நெல்லை
குளங்களில் கழிவு
நாகர்கோவில் அருகே தெங்கம்புதூர், பறக்கை சுற்றுவட்டார குளங்களில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
பறக்கை வாசகர்
அறிவிக்கப்படாத மின்தடை
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை சரகத்தில் முன் அறிவிப்பின்றி அதிக மின்வெட்டு அமலில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை வாசகர்
மதுக்கடை அகற்றப்படுமா?
தக்கலை போலீஸ் நிலையம் அருகே பத்மநாபபுரம் அரண்மனை சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். சாலை பாராக உள்ளது. மேலும், இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பள்ளிக்கூடம் அருகே அமைந்துள்ளது. எனவே, இந்த கடையை அகற்ற வேண்டும்.
அலெக்சாண்டர், தக்கலை
சீரமைக்கப்படாத சாலை
குமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் சாலை மிகவும் மோசமாக உள்ளது. நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனை உடனே சீரமைக்க வேண்டும்.
செல்வன், ராஜாக்கமங்கலம்
ஊதியம் கிடைக்கவில்லை
கூடங்குளம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேதநாயகம், எஸ்.எஸ்.புரம்
பாழடையும் கட்டிடம்
விளாத்திகுளம் அருகேயுள்ள ராமனூத்து கிராமத்தில் மின்வாரியம் சார்பில் கட்டப்பட்ட கட்டிடம் எந்தவித உபயோகமும் இல்லாமல், பாழடைந்து வருகிறது. இதன் மூலம் அரசு பணம் வீணாகிறது. இந்த கட்டிடத்தை பயன்படுத்த வேண்டும்.
விளாத்திகுளம் வாசகர்
சுவரொட்டிகள் பிரச்சினை
திருநெல்வேலி மாநகராட்சி எதிர்புறம் வ.உ.சி மண்டபம் உள்ளது. அதற்கு வழிகாட்டி பலகை இருந்தது. அது இப்போது முன்னும், பின்னும் விளம்பரமாக ஒட்டப்பட்டு மறைந்து போயுள்ளது.
நடராஜன், நெல்லை டவுன்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT