Published : 26 Oct 2016 11:05 AM
Last Updated : 26 Oct 2016 11:05 AM

உங்கள் குரல்: மழை தொடங்குவதற்கு முன்பு சென்னை நன்மங்கலம் ஏரியை சீரமைக்க கோரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு நன்மங்கலம் ஏரியை சீரமைக்க கோரிக்கை

நன்மங்கலம் ஏரியை தூர்வாருவதுடன், கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்லும் போக்கு வாய்க்காலை மழை தொடங்குவதற்குள் சீரமைக்க வேண்டும் என வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையின் புறநகர் பகுதியான குரோம்பேட்டைக்கும், மேடவாக்கத்துக் கும் இடையில் அமைந்துள்ள பகுதி நன்மங்கலம். காப்புக்காடு, ஏரி என பசுமை நிறைந்த, விவசாயம் செழித்த இப்பகுதி தற்போது வறண்ட பூமியாகி விட்டது. அதிகளவில் அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்ததால், 500 ஹெக்டேர் விவசாயம் தற்போது ஒரு சில ஏக்கருக்குள் சுருங்கி விட்டது.

1,500 ஹெக்டேரில் இருந்து ஏரியும் தற்போது மிகச்சிறியதாக மாறிவிட்டது. கடந்த மழையின்போது இந்த ஏரி யில் இருந்து உபரிநீர் வெளியேற வழி யில்லாததால், அருகில் உள்ள நெமிலிச் சேரி, நன்மங்கலம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. எனவே, ஏரியை தூர்வார வேண்டும், போக்கு வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக நன்மங்கலத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத வாச கர் ஒருவர், ‘தி இந்து’வின் உங்கள் குரலில் கூறியதாவது:

குரோம்பேட்டை, நன்மங்கலம் பகுதி களை இணைக்கும் விதமாக நன்மங்க லம் ஏரி அமைந்துள்ளது. 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட இந்த ஏரியின் ஒரு பகுதியில் 50 அடி நீளத்தில், உபரிநீர் வெளியேறும் கலங்கல் பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து வெளியேறும் நீர், கோவி லம்பாக்கம் வழியாக, கீ்ழ்க்கட்டளை ஏரிக்கு செல்லும். அங்கிருந்து பள்ளிக்கரணைக்கு உபரிநீர் செல்லும்.

ஆனால், கடந்த முறை மழையின் போது ஏரி நிறைந்து உபரிநீர் வெளியேற வழியில்லாமல், நெமிலிச்சேரி, அஸ்தினா புரத்தின் கடைசிப் பகுதி, நன்மங்கலம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவி நின்றது. இதற்கு காரணம், போக்கு கால்வாய் மறிக்கப்பட்டதுதான். ஏரியில் இருந்து பல்லாவரம் நகராட் சிக்கு சொந்தமான இடம் வரை, கால் வாய் நன்றாக உள்ளது. தற்போது தூர்வாரப்பட்டும் உள்ளது.

ஆனால், நன்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பிருந்தாவன் நகரில் இருந்து 100 மீட்டருக்கு பின் கால் வாய் இல்லை. கால்வாய் போகும் வழியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. 40 அடி அகல கால்வாய் தற்போது சுருங்கிவிட்டது. கடந்த பல ஆண்டுகளாக இதை உள்ளாட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல், நன்மங்கலம் ஏரியும் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப் படவில்லை. ஏரிக் கரைகளை பலப்படுத்தி, ஏரியில் முளைத்திருக்கும் செடிகளை அப்புறப்படுத்தினால், நீரும் சுத்தமடையும், நிலத்தடி நீரும் மேம்படும். ஏரியில் முழுமையாக நீரை தேக்கினால் 3 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இப்பகுதியில் இருக்காது. அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக, பொதுப்பணித்துறை நீர்வளப் பிரிவு அதிகாரி கூறியதாவது: நன்மங்கலம் ஏரியில் இருந்து கீழ்க் கட்டளைக்கு நீர் செல்லும் கால்வாயின் உண்மையான பகுதி, தற்போது இருக்கும் அளவுதான். பட்டா நிலம் வழி யாகத்தான், கீழ்க்கட்டளை ஏரிக்கான கால்வாயில் தண்ணீர் சென்று சேர்ந்து வந்தது. தற்போது வீடுகள் கட்டப் பட்டாலும், ஆங்காங்கே சிறிய ஓடைகளில் இணைந்து செல்கிறது.

ஆனால், அதிகப்படியான தண்ணீர் வந்தால் விரைவாக செல்ல முடியாது. தற்போது மழைக்கு முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். நிரந்தரமாக கால்வாய் அமைக்க, நில அளவைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தனியார் நிலம் என்பதால், நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அவை மேற்கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் முழுமையான கால்வாய் அமைக்கப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x