Published : 18 Oct 2016 12:12 PM
Last Updated : 18 Oct 2016 12:12 PM
தூய்மைப்படுத்த தூத்துக்குடி மக்கள் கோரிக்கை
தூத்துக்குடி சிவன் கோயில் தெப்பக்குளம் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. இதனை சுத்தப்படுத்த வேண்டும் என, பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘தி இந்து’ நாளிதழின் உங்கள் குரல் பகுதியில் பேசிய தூத்துக்குடியை சேர்ந்த வாசகர் ஒருவர், தூத்துக்குடி தெப்பக்குளம் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து வருவதாக கவலை தெரிவித்தார்.
தெப்ப உற்சவம்
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சங்கரராமேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சிவன் கோயிலுக்கு எதிரேயுள்ள டி.ஆர்.நாயுடு தெரு பகுதியில் உள்ளது.
இந்த தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் தைப்பூச விழாவை முன் னிட்டு தெப்ப உற்சவம் நடை பெறும். தெப்பக்குளத்தில் ஏராள மான மீன்களும் உள்ளன. தெப்பக் குளத்தை சுற்றி பாதுகாப்புக் காக இரும்பு கிரில் அமைக்கப் பட்டுள்ளது.இப்பகுதியானது மாலை நேரத்தில் மக்கள் பொழுது போக்கு இடமாகவும் உள்ளது.
ஆக்சிஜன் குறைவு
இந்த தெப்பக்குளம் தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் மாசடைந்து வருகிறது. இதனைத் தவிர பாசிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனால் தெப்பக்குளத்தின் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறி துர்நாற்றம் வீசுகிறது.
தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த விலங்கியல் மாணவர்கள் தெப்பக்குளம் தண்ணீரை சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள் மொத்தமாக இறந்து போகும் அபாயம் இருப்பதாகவும் மாணவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே, தூத்துக்குடி தெப்பக்குளத்தை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும் என, பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிக விரைவில்
இதுதொடர்பாக தூத்துக்குடி சிவன் கோயில் செயல் அலுவலர் ச.அஜித் கூறும்போது, ``தெப்பக்குளத்தில் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேர்ந்திருப்பதால் மாசடைந்திருப்பது குறித்து எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. எனவே, தெப்பக்குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்களிடம் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால் நன்கொடையாளர் மூலம் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். மிக விரைவில் தெப்பக்குளம் சுத்தம் செய்யப்படும்’’ என்றார் அவர்.
************
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் தொலைபேசி எண்கள்
சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT