Published : 26 Oct 2016 11:38 AM
Last Updated : 26 Oct 2016 11:38 AM

உங்கள் குரல்: ஆரணியில் உள்ள பெரிய வங்கியில் வாடிக்கையாளர்களை அவமதிக்கும் ஊழியர்கள்

விவசாயிகளை அலட்சியப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள தேசிய மயமாக் கப்பட்ட வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகள் அவமதிக்கப்படுவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து உங்கள் குரல்’ சேவையில் தொடர்பு கொண்ட ஆரணியில் வசிக்கும் குமார் என்பவர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் பலரை ஊழியர்கள் உதாசீனப் படுத்துவதாக புகார் தெரிவித்துள் ளார்.

மேலும் அவர் கூறும்போது, ‘ஆரணியில் உள்ள தேசிய மயமாக் கப்பட்ட பிரபல வங்கியில் என் மகனுக்கு சேமிப்புக் கணக்கு உள்ளது. ஏடிஎம் கார்டு தொடர்பாக சந்தேகம் கேட்க வங்கிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்றேன். அப்போது பணியில் இருந்தவர்கள், என்னுடைய சந்தேகத்தை காது கொடுத்து கேட்க முன்வரவில்லை.

‘மே ஐ ஹெல்ப் யூ’ என்ற பலகையுடன் ஒருவர் இருந்தார். அவரும், முகத்தை சுளித்துக் கொண்டார். வங்கி மேலாளரிடம் உரிய பதில் கிடைக்கவில்லை. இறுதியாக, ஏடிஎம் மையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி, சரியான விளக்கத்தை கொடுத்தார். தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளில் லட்சாதிபதி, கோடீஸ்வரர்களின் கேள்விக்கு மட்டுமே பதில் அளிப்பார்கள் என்று நினைக்க தோன்றுகிறது.

எனக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்றால், அங்கு வந்த வாடிக்கையாளர்களுக்கும் அதே நிலைமைதான். விவசாயிகளை கிள்ளுக்கீரையைப் போல் நடத்து கிறார்கள். எல்லா வங்கிகளுக்கும் முன் உதாரணமாக நடக்கவேண் டிய வங்கியே இப்படி நடந்து கொள்ளலாமா? மேலும் இலவச சமையல் காஸ் சிலிண்டர் திட்டத் தின் பயன்பெற கணக்கு தொடங்க வரும் மக்கள் அலைக்கழிக்கப்படு கின்றனர். வாடிக்கையாளர்களை மதிப்பது இல்லை. ஏழை மற்றும் நடுத்தர வாடிக்கையாளர்களையும் வங்கியாளர்கள் மதிக்க வேண்டும்’’ என்றார்.

இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனை வரையும் சமமாகதான் நடத்துகி றோம். ஒரு சில நேரங்களில் வாடிக் கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். வாடிக்கையாளர் களை அவமதிப்பது கிடையாது’ என்றார்.

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x