Published : 21 Oct 2016 12:51 PM
Last Updated : 21 Oct 2016 12:51 PM

உங்கள் குரல்: தருமபுரியில் இலவச கழிப்பிடம் தேவை

அடிப்படை வசதிகள் வேண்டும்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள எஸ்.பி.கே நகர் பகுதிக்கு குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.பாரி, நாமக்கல்.

சுகாதாரச் சீர்கேடுகள்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கோபி ஒன்றியம் பெருந்தலையூர் ஊராட்சி கிராம பகுதிகளில் கொசு மருந்து அடிப்பதே இல்லை. இதனால் டெங்கு உள்ளிட்ட சுகாதாரக் கேடுகள் ஏற்படுகிறது. இதற்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.

- நல்லையன், பவானி.

பேருந்துகளில் அதிக கட்டண வசூல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டை பகுதி மக்கள் அடிக்கடி திருப்பத்தூர் செல்வது வழக்கம். இந்த வழித்தடத்தில் இயங்கும் சில தனியார் பேருந்துகள் அதிக கட்டண வசூலில் ஈடுபடுகின்றன. மேலும், அரசு மற்றும் தனியார் என பல பேருந்துகள் சிங்காரப்பேட்டை பயணிகளை ஏற அனுமதிப்பதில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சவுந்தர், ஊத்தங்கரை.

தொற்று நோய் பரவும் அபாயம்

சேலம் குரங்குச்சாவடி இந்தியன் வங்கி காலனி பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக சாலையை வெட்டி சேதப்படுத்தி 6 மாதமாகியும் பள்ளம் மூடப்படவில்லை. கழிவுநீர் கால்வாய் தூரெடுத்து பல மாதங்கள் ஆகிறது. சில வீடுகளின் மனித கழிவுகள் நேரடியாக கால்வாயில் விடப்படுவதால் தொற்றுநோய் பரவி வருகிறது. தெருவிளக்கு பிரச்சினையும் உள்ளது. இதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- செல்வம், சேலம்.

தெருவிளக்கு வேண்டும்

ஓசூர் கோகுல் நகரில் தெருவிளக்கு மற்றும் சாலை வசதி சரிவர இல்லை. இதனால், பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

- செந்தில்குமார், ஓசூர்.

வங்கி கிளை செயல்படுமா?

சேலம் நெத்திமேடு பகுதி தினசரி பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் இடம். எஸ்.பி அலுவலகமும் இங்குதான் உள்ளது. இப்பகுதியில் ஏடிஎம் மையம் எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் ஏடிஎம் மையம் அல்லது வங்கிக் கிளை ஒன்றை அமைக்க அதிகாரிகள் நடவ்டிக்கை எடுக்க வேண்டும்.

- கே.சுப்பிரமணியன், சேலம்.

தெருநாய்களால் விபத்து

சேலத்தில் இருந்து முத்துநாயக்கன்பட்டி செல்லும் புதுரோடு பகுதியில் ஏராளமான நாய்கள் குறுக்கிடுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

- முத்துமணிராஜா, சேலம்.

இலவச கழிப்பிடம் தேவை

தருமபுரி நகராட்சி பேருந்து நிலையங்களில் இலவச பொது கழிப்பிடம் இல்லை. இருக்கும் கழிப்பிடங்கள் அனைத்தும் தனியார் வசம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளன. அவைகளிலும் மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, இலவச கழிப்பிடம் அமைக்கவும், தனியார் வசம் உள்ள கழிப்பிடங்களில் கட்டண வசூலைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுரேஷ், தருமபுரி.

கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்

தருமபுரி இண்டூர் அரசு பள்ளியில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் பயிலுகின்றனர். பள்ளி தொடங்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லை. தருமபுரியில் இருந்து இண்டூர் வரும் ஒரு பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்கின்றனர். அடிக்கடி விபத்து நேரிடுகிறது. மாணவர்கள் நலன்கருதி தருமபுரியில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க எடுக்க வேண்டும்.

- புஷ்கரன், இண்டூர், தருமபுரி.

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x