Published : 14 Oct 2016 02:05 PM
Last Updated : 14 Oct 2016 02:05 PM

உங்கள் குரல்: நாமக்கல் - திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை

அன்புள்ள வாசகர்களே.. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

044-42890005 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

முட்செடிகள் ஆக்கிரமிப்பு

தலைவாசல் ரயில் நிலைய வளாகத்தில் முட்செடிகள் ஏராளமாக வளர்ந்து புதர்கள் அடர்ந்த இடமாக காட்சியளிக்கிறது. இதனால், இரவு நேரத்தில் விஷ ஜந்துக்கள் நடமாடும் ஆபத்து நிலவுகிறது. எனவே, ரயில் நிலைய வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி, போதிய மின் விளக்குகளை அமைத்து பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.

- பொன்.ராஜேந்திரன், தலைவாசல்.

பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?

தருமபுரி மாவட்டத்தில் புதிய வட்டமாக அறிவிக்கப்பட்ட நல்லம்பள்ளியில் விரைவாக பேருந்து நிலையம் அமைத்து மக்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறவும், இறங்கவும் உதவும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆதவன், நல்லம்பள்ளி.

மின் விளக்கு அமைக்க கோரிக்கை

நாமக்கல் - திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு வசதியில்லாததால் இரவு நேரத்தில் பாலத்தின் வழியாக பயணிப்பது பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பாலத்தில் விரைந்து மின் விளக்கு வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.ஆச்சிசிவப்பிரகாசம், ஆண்டவர் நகர், நாமக்கல்.

நாய்கள் தொல்லை அதிகம்

சேலம் மாவட்டம் முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. குறிப்பாக ஆத்தூர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்த நாய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதுடன், நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.சிவக்குமார், ஆத்தூர்.

போன் பில் கட்டுவதில் சிரமம்

தருமபுரி தொலைபேசி இணைப்பகத்தில் பில் கட்டும் வசதி முதல்மாடியில் வைக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்த வரும் முதியவர்கள், பெண்கள் முதல்மாடிக்கு சென்று பில் கட்டுவதற்கு சிரமப்படுகின்றனர். எனவே, வாடிக்கையாளர்களின் நலன் கருதி பில் செலுத்தும் வசதியை தரைதளத்துக்கு மாற்ற வேண்டும்.

- செல்வராஜ், தருமபுரி.

சாலை மையக்கோடு தேவை

சேலம் கோட்டை பகுதியில் திருவள்ளுவர் சிலையில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் சாலை மையத்தை குறிப்பிடும் வெள்ளைக்கோடு வரையப்படாமலும், இதே சாலையில் உள்ள வேகத்தடையில் எச்சரிக்கை வர்ணம் பூசப்படாமலும் உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதால் உடனடியாக வெள்ளைக்கோடு மற்றும் வேகத்தடைக்கு எச்சரிக்கை வர்ணம் கொடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் கோட்டை பகுதியில் திருவள்ளுவர் சிலையில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் சாலை மையத்தை குறிப்பிடும் வெள்ளைக்கோடு வரையப்படாமலும், இதே சாலையில் உள்ள வேகத்தடையில் எச்சரிக்கை வர்ணம் பூசப்படாமலும் உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதால் உடனடியாக வெள்ளைக்கோடு மற்றும் வேகத்தடைக்கு எச்சரிக்கை வர்ணம் கொடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.குகன், தாதுபாய்குட்டை, சேலம்.

நிழற்கூடம் அமைக்க வேண்டும்

பெத்தநாயக்கன் பாளையத்தில் சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்கான நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. வெயில் மற்றும் மழையின்போது பயணிகள் பேருந்துக்காக காத்து நிற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பயணிகள் நலன் கருதி பெத்தநாயக்கன் பாளையம் ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, உடனடியாக சாலையின் இருபுறத்திலும் பயணிகள் நிழற்கூடை அமைக்க வேண்டும்.

- ஆ.பா.செந்தில் குமார். பெத்தநாயக்கன் பாளையம்.

பராமரிக்கப்படாத கழிப்பிடங்கள்

சேலம் புதிய பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பேருந்து நிலையத்தினுள் நுழைந்தாலே கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகளுக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. குறிப்பாக, குழந்தைகள் எளிதில் நோய்வாய்ப்படும் நிலை இருக்கிறது. மாநகராட்சி நல அலுவலர் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.காளிதாஸ், சின்னேரி வயல்காடு, சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x