Published : 18 Oct 2016 12:12 PM
Last Updated : 18 Oct 2016 12:12 PM

பருவமழை தொடங்குவதற்குள் சிவகங்கை பனையனேந்தல் கண்மாய் மடையை சீரமைக்க வேண்டும்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் பனையனேந்தல் கண் மாயில் உள்ள மூன்றாவது மடையை சீரமைக்க 3 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக சொக்கநாதிருப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் க.கோபால், ‘தி இந்து’ உங்கள் குரல் மூலம் புகார் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி யுள்ளதாவது:

பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பனையனேந்தல் கண்மாயை நம்பி 150 ஏக்கருக்கு மேல் பாசனப்பரப்புகள் உள்ளன. இதில் வருவாய்த் துறை ஆவணத்தின்படி 4 மடைகள் உள்ளன. ஆனால், 3, 4-வது மடைகள் சிறுகுழாய்கள் மூலமே பாசனம் நடந்துவருகின்றன. இங்கு மடைகள் கட்டித்தரக்கோரி விவசாயிகள் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாகக கோரிக்கை வைத்து வருகிறோம். கடந்த 3 ஆண்டாக மக்கள் குறைதீர்க்கும் நாள், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துள்ளோம்.

ஆனால்,மடையை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மதிப்பீடு தயார் செய்துள்ளோம், அனுமதி கிடைத்தவுடன் வேலையை துவக்கிவிடுவோம் என்ற பதிலை மட்டுமே சொல்லி காலம் கடத்திவருகின்றனர். மதுரை உயர்நீதிமன்றம் உத்தர விட்டு ஓர் ஆண்டுக்கு மேலா கியும் இன்னும் 3-வது மடை சீரமைக்கப்படவில்லை. எனவே பருவமழை தொடங்குவதற்குள் மடைகள் அமைத்து பாசனப்பரப்பை அதிகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மானாமதுரை உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் கூறியது:

கடந்த ஓர் ஆண்டாகத்தான் கோரிக்கை வைத்துள்ளார். மதிப்பீடு தயார் செய்து, நிதி ஒதுக்கப்பட்டு ஆட்சியரின் அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளோம். அனுமதி கிடைத் தவுடன் பணியை தொடங்கி விடு வோம் என்றார்.

மதுரை மாநகராட்சியில் நிரந்தர குடிநீர் தட்டுப்பாடு: விநியோக நேரத்தில் மின்தடை ஏற்படுத்த யோசனை

மதுரை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யும் நேரத்தில் மின்மோட்டாரை வைத்து சிலர் குடிநீரை உறிஞ்சுவதால் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க குடிநீர் விநியோக நேரத்தில் மின்தடை ஏற்படுத்த வேண்டும் என ‘தி இந்து’ உங்கள் குரலில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. காவிரி, வைகை கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் மாநகராட்சி குடிநீர் விநியோகம் செய்கிறது.

சமீப காலமாக மழைபெய்யாததால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி குறைந்த அளவில் குடிநீர் விநியோகம் செய்து வரும் நேரத்தில், அந்த நீரையும் வீடுகளில் மின்மோட்டாரை பயன்படுத்தி சிலர் உறிஞ்சுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், குடிநீர் விநியோகம் செய்யும் நேரத்தில் மாநகராட்சி மின்வாரியத்திடம் பேசி மின்தடை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் உங்கள் குரலில் நூதன கோரிக்கை வைத்துள் ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

மதுரை மாநகராட்சியில் குடிநீரை தனியார் மின்மோட்டார் மூலம் உறிஞ்சுவதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. கடந்த பல ஆண்டுகளாக இதுபோன்று குடிநீர் திருடப்படுவதால், மேடான பகுதிகள், கடைகோடிப் பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. பெரும்பாலான வீடுகளில் குழாய்களில் தண்ணீர் வருவதே இல்லை. அடி பம்புகளை பயன்படுத்தியும் கூட போதிய தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதனால், அறுவை சிகிச்சை செய்த பெண்கள், உடல்நலமில்லாத பெண்கள், முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் விநியோக நேரத்தில் கடைசி பகுதி வரை குழாய்களில் தண்ணீர் செல்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அதிகாரிகள் வராததால் குடிநீர் விநியோக ஊழியர்களும் தண்ணீரை திறந்து விடுவதோடு சரி, வார்டுகளில் தலைகாட்டுவதில்லை.

பல வார்டுகளில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் தண்ணீரை ஏற்றி குடிநீர் விநியோகம் செய்வதில்லை. குடிநீர் திட்டங்களில் இருந்து வரும் நீரை அப்படியே விநியோகம் செய்வதாகக் கூறப்படுகிறது. குடிநீர் வரவில்லை என அதிகாரிகளிடம் புகார் கூறினாலும், அவர்கள் குடிநீர் விநியோகிக்கும்போது சொல்லுங்கள் வருகிறோம் என்கின்றனர். ஆனால், அதன்படி எங்கள் பகுதிக்கு வருவதில்லை. நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றதால் வீட்டு உபயோகத்துக்கும், குடிநீருக்கும் தனியாரிடம் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது என்றனர்.

************

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் தொலைபேசி எண்கள்

சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x