Published : 10 May 2016 10:59 AM
Last Updated : 10 May 2016 10:59 AM

வாக்காளர் வாய்ஸ்: வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்?

இந்த வாரத்துக்கான தலைப்பு:

ஆட்சிக்கு வந்தபிறகும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தலைவர்கள் / வேட்பாளர்கள் / கட்சிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என நினைக்கிறீர்கள்? நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகளைக் கூறுங்கள்.

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

எஸ்.லெட்சுமிபதி, தாம்பரம்

ஆட்சிக்கு வந்த பிறகும் தேர்தல் வாக் குறுதிகளை நிறைவேற்றாத தலைவர்களை அவர்கள் வகிக்கும் பதவியில் இருந்து அகற் றும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்காக மத்திய, மாநில அரசு களால் தேவையான சட்டத் திருத்தம் செய்யப் பட்டு அவை நடைமுறைக்கு வரும்போது தான் உண்மையான மக்களாட்சி அமையும்.

ஜவஹர், முகலிவாக்கம்

தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை கண்காணிக்கும் அதிகா ரம் தேர்தல் ஆணையத்துக்கு தரப்பட வேண்டும். வெற்றி பெறும் வேட்பாளர் களைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பாக தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா என்பதை ஒரு குறிப்பிட்ட கால இடை வெளிக்குள் சரிபார்க்க வேண்டும்.

அசோகன், அசோக்நகர்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத கட்சி, வேட்பாளர், தலைவர் மீது தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அதற்கு சட்டம் இயற்ற வேண்டும். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் தேர்தல் ஆணையம் வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று செய்தால்தான் வரும் தேர்தலில் சரியான தேர்தல் அறிக்கைகளை கட்சியினர் கொடுப்பார்கள். செயல்படுத்தாத தேர்தல் அறிக்கையை கொடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் பதவி இழக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

ராஜகோபாலன், மேற்கு தாம்பரம்.

தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை செயல்படுத்தாத கட்சி, தலைவர், வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க தற்போது இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட எந்த சட்டத் திலும் இடம் இல்லை. மக்கள் தொடர்ந்து அவர்களை புறக்கணிப்பது மூலமாகத் தான் தண்டனை தர முடியும்.

ஞானதேசிகன், அமைந்தகரை

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற காலக்கெடு தர வேண்டும். அப்போதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வெற்றி பெற்று எம்எல்ஏவான வேட்பாளருக்கு பாதி சம்பளம் தர வேண் டும். வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை அந்த கட்சியின் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.

செல்வநாதன், ஒரகடம்

வாக்குறுதிகளை நிறை வேற்றாத எம்எல்ஏ வீட் டுக்கு மக்கள் சென்று வாக் குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று மனு அளித்து போராட்டம் நடத்தி எதிர்ப்பை காட்ட வேண்டும். அந்த கட்சி யின் தலைவருக்கு தொகுதியில் உள்ள அனைத்து மக்களும் தனித்தனியாக கடிதம் எழுதி வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று கட்டாயப்படுத்த வேண்டும்.

ராஜசேகர், ஆவடி

வெற்றி பெற்ற வேட்பாளர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால்தான் மக்கள் மத்தியில் நம்பிக்கை இருக்கும். கொடுத்த வாக்குறுதியை செயல்படுத்த வில்லை என்றால் மக்களிடம் நம்பிக் கையை இழந்தவராகிவிடுகின்றனர். அடுத்த தேர்தலில் அவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவது அந்தந்த கட்சியின் கடமையாகும்.

தருமன், செங்குன்றம்

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் அக்கட்சி செய்ய உள்ள திட்டங்களை தேர்தல் அறிக் கையாக வெளியிடுகிறது. அந்த அறிக்கையில் கூறப்படும் தகவல்கள் சரியாக செய்யப்படுகிறதா என்று யாரும் கண்டுகொள்வதில்லை. இதை தடுக்க ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையின் நகலை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும்போது இதில் குறிப்பிட்டவற்றை எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றுவேன் என்று அக் கட்சி தலைமை உறுதி அளிக்க வேண்டும். அதை தலைமை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். அடுத்த தேர்தல் வரும்போது பழைய தேர்தல் அறிக்கையில் 75 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று பார்த்து, செயல்படுத்தவில்லை என்றால் அக்கட்சியை தேர்தலில் நிற்காமல் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.

அப்துல்லா, அம்பத்தூர்

இந்திய அரசியல் அமைப்பு சட்டத் தையும் மாற்றம் செய்து வாக்குறுதிகளை நிறைவேற்றாத எம்எல்ஏவின் பதவி ரத்தா கும் என்று கொண்டுவர வேண்டும். மக்கள் விழிப்புடன் இருந்தால் யாரும் ஏமாற்ற முடியாது.

சுந்தர், மயிலாப்பூர்

தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு வெற்றி பெற்றவுடன் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கும் வேட்பாளரை தொகுதி மக்கள் புறக்கணிக்க வேண்டும். தொகுதியில் நடக்கும் அரசு விழாவில் அவர் கலந்துகொள்ளாமல் தடுக்க வேண்டும். மீறி கலந்துகொண்டால் மக்கள் போராட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற செய்திட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x