Published : 11 May 2016 11:31 AM
Last Updated : 11 May 2016 11:31 AM

வாக்காளர் வாய்ஸ்: நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகள்!

இந்த வாரத்துக்கான தலைப்பு:

ஆட்சிக்கு வந்தபிறகும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தலைவர்கள் / வேட்பாளர்கள் / கட்சிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என நினைக்கிறீர்கள்? நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகளைக் கூறுங்கள்.

எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை

முதலில் தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்ற அத்தொகுதியில் வெற்றிபெற்ற சட்டப்பேரவை உறுப்பினருக்கு 6 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதற்குள் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அவர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும். மறுதேர்தலுக் கான முழுச்செலவையும் அவர் சார்ந்த கட்சியின் தலைமையிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும்.

ஆ.நந்தகோபாலன், ராமாபுரம்

வேட்புமனு தாக்கல் செய்யும்போதே வேட் பாளரிடம் இருந்து வாக்குறுதிகளை எழுத்துப் பூர்வமாக தேர்தல் கமிஷன் பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றபின் அந்த வாக்குறுதிகளை சம்பந்தப்பட்ட வேட் பாளர் நிறைவேற்றுகிறாரா என்பதை கண் காணிக்க ஒரு நிரந்தர குழு அமைத்து 6 மாதங் களுக்கு ஒருமுறை ஆராய வேண்டும். வாக் குறுதிகளை நிறைவேற்றாத உறுப்பினர்கள் மற்றும் அவர் சார்ந்த அரசியல் கட்சிக்கு நோட் டீஸ் அனுப்ப வேண்டும். இதன் அடிப்படை யில் வாக்குறுதிகளை நிறைவேற்ற அக் கட்சி அவருக்கு 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும். அப்படியும் நிறைவேற்றா விட்டால் அவரை சட்டபேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது.

பாஸ்கரன், சேப்பாக்கம்

ஆட்சிக்கு வந்த பின் தேர்தல் வாக்குறுதி களை தலைவர்கள் நிறைவேற்றாததை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதைவிட, முதலில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத தேர்தல் அறிக்கை வெளியிடுபவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப் படிப்பட்ட தலைவர்களை தேர்வு செய்யா மலேயே விட்டுவிட வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டி ருந்த முக்கியமானவற்றை செயல்படுத்தி யிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் நட வடிக்கை எடுக்காமல் ஐந்தாண்டு காலத்தை யும் வீணடித்துவிட்டு ஒன்றுமில்லாத விஷ யங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து செய்து கொண்டிருப்பார்களே யானால் அத்தகைய தலைவர்களை உடனடி யாக அடுத்த தேர்தலில் தோற்கடிக்க வைத்து தாங்கள் செய்த தவறுகளை உணர வைக்க வேண்டும்.

ஏ.பவுன் சுப்பையா, பெரியமேடு

வங்கிகளில் பணம் வாங்கி சரியான முறையில் திருப்பிச் செலுத்தாத உறுப் பினர்களை சிபில் எனும் அமைப்பில் பதிவு செய்து மற்ற இடங்களில் பணம் வாங்கமுடியாதபடி செய்துவிடுகின்றனர். அதே போல், வாக்குறுதிகளை நிறைவேற்றாத தலைவர் மற்றும் வேட்பாளர்களை மீண்டும் ஓட்டுக் கேட் கவோ, தேர்தலில் நிற்கவோ தடை செய்யும் வண்ணம் தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெ.ஜோஷிகுமார், வண்ணாரப்பேட்டை

ஒவ்வொரு கட்சி தலைவர், வேட்பாளர் ஆகியோர் அளித்த தேர்தல் வாக்குறுதி களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெற்று ஆட்சி அமைத்த 4 ஆண்டுகளுக்குள் அவற்றை நிறைவேற்ற வேண்டும். 4 ஆண்டுகள் கழித்து தேர்தல் ஆணையமே வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை அமைத்து ஒவ்வொரு தொகுதியையும் ஆய்வு செய்ய வேண்டும். இதில் 90 சதவீதம் நிறைவேற்றி யிருந்தால், அவரை தொடர்ந்து எம்எல்ஏ வாக நீடிக்க அனுமதிக்கலாம். அவ்வாறு நிறைவேற்றப்படாமல் இருக்கும்பட்சத் தில் அவரை அடுத்த தேர்தலில் போட்டி யிட தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும். மேலும் எம்எல்ஏக்களுக் குரிய படிகள், சலுகைகளை ரத்து செய்ய வேண்டும். இதன்மூலம் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன்.

ரா.பிரசன்னா, திருவொற்றியூர்

ஆட்சிக்கு வந்த பிறகும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தலைவர்கள், வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும். அதற்கு முன்னால், கவர்ச்சிகரமான திட்டங்களை மட்டுமே வைத்து கட்சிகளுக்கு ஓட்டு போடும் மக்களின் மன நிலையில் மாற்றம் வர வேண்டும். அதுதான் தேர்தல் அறிக்கைக்கும், வெற்றிகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது.

ஒரு தொலைக்காட்சிக்கும், மிக்ஸி, கிரைண்டருக்கும் ஓட்டுப்போடும் மனோ பாவம் இருக்கும்வரை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு ஆட்சியில் அனல் மின்நிலை யம், தடுப்பணை போன்றவற்றை 5 ஆண்டு களில் கட்டி முடிக்க முடியாது. எனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட் டங்களுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியை 5 வருடங்களில் செலவழித்திருக்கிறாரா, இல்லையா என்பதை கவனிக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாத எம்எல்ஏ மீண்டும் போட்டியிடாமல் தேர்தல் ஆணை யம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என்.பி.ரவிச்சந்திரன், கூடுவாஞ்சேரி

வேட்பாளர்கள் தேர்தல் அறிக்கையில் திட்டங்களை சொல்கிறார்களே தவிர, இவ் வளவு நாட்களுக்குள் அதை செய்து முடிப் போம் என்று குறிப்பிடுவதில்லை. அப்படி அவர்கள் காலக்கெடுவை குறிப்பிட்டால், அதுவே நமக்கு நம்பிக்கை அளிக்கும். மேலும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை என்றால், அதில் அமைச்சர்களுக்கு மட்டுமல்லாது, முதல்வருக்கும் பங்கு இருக்கிறது. எனவே மக்கள் கேள்வி எழுப்புவதைத் தவிர வேறு வழியில்லை.

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x