Published : 18 May 2016 11:38 AM
Last Updated : 18 May 2016 11:38 AM
இந்த வாரத்துக்கான தலைப்பு
ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் அளித்த வாக்குறுதிகள் இருக்கட்டும்... தமிழ்நாட்டில் புதிதாக பதவி ஏற்கும் அரசு உடனடியாக கையெழுத்திட வேண்டிய கோப்புகள் எவை? ஏதேனும் மூன்றைச் சொல்லுங்கள்... அதற்கான காரணத்தையும் சொல்லுங்கள்... |
கே.ராமச்சந்திரன், செங்குன்றம்
தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்கும் அரசு உடனடியாக கையெழுத்து போட வேண்டிய கோப்பு எல்லோரும் எதிர்பார்ப் பது போல மதுவிலக்கு அமல்படுத்துவதற்காகத்தான் இருக்க வேண்டும். தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள கலாச்சார சீரழி வுக்கு முக்கிய காரணமாக இருப்பது மது போதை. நாட்டின் எதிர்கால தூண்களாகிய மாணவர்களையும் இளைஞர்களையும் நாச மாக்கும் மதுவை தடை செய்ய, முதல் கையெழுத்து போட வேண்டும். அடுத்து, மழை நீர் சேகரிப்பை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு கையெழுத்து போடப்பட வேண்டும்.
கண்ணுக்கு தெரியாமல் மிகப்பெரும் பிரச்சினையாக வளர்ந்து வருவது, தண் ணீர் பற்றாக்குறை. குடிநீர், விவசாயம் ஆகியவற்றுக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், குடிக்கத் தண்ணீரும் கிடைக்காது, சாப்பிட உணவும் கிடைக்காது. மழைநீர் சேகரிப்பை சட்டப்படி அனைவரும் செய்ய வேண்டும் என்பதே 2-வது கையெழுத்தாக இருக்க வேண்டும். மூன்றாவது கையெழுத்தாக கல்வியை அரசு மயமாக்க வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் மாணவர்களின் ஒழுக்கம், கல்வித் திறன் ஆகியவை சீரற்றதாக இருக்கிறது. இதற்கு காரணம் தனியாரிடமும் கல்வி இருப்பதுதான். தனியார் கல்வி நிறுவனங் கள் இருப்பதால், அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் அரசு ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், தனியார் பள்ளிகள் அரசுக்கு கட்டுப் படாமல் தன்னிச்சையான பாட போதனை முறை, கட்டணம் வசூலிப்பு ஆகியவற்றில் ஈடுபடுவதால், சமச்சீரற்ற கல்வி நிலவுகிறது.
சி.மணிகண்டன், மறைமலைநகர்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கப் போகிறவர், தமிழகத்தில் ஆறாக ஓடிக்கொண்டிருக்கும் மதுவை தடை செய்யும் உத்தரவில்தான் முதல் கையெழுத்திட வேண்டும். மதுவினால் ஏற்படும் தீமைகளை யாவரும் அறிவர். அந்த மதுவை விற்பனை செய்வதால் கிடைக்கும் வருமானம் அரசுக்கு தேவையில்லை. எனவே, மதுவிலக்கு அமலாக்கத்துக்கு முதல் கையெழுத்து தேவை. 2-வதாக சாலை விபத்துகளைத் தடுக்க கடுமை யான நடவடிக்கை எடுப்பதற்கான கோப்பில் கையெழுத்து போட வேண்டும்.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் சாலை விபத்துகள் நிகழ்வதுடன், இதில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகி றது. இந்த பிரச்சினையில் இதுவரை எந்த அரசும் தீவிர கவனம் செலுத்த வில்லை. எனவே விமான விபத்துகளுக்கு கொடுக் கும் முக்கியத்துவம் சாலை விபத்துகளுக்கும் கொடுக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட வேண்டும்.
3-வது உத்தரவாக, அரசு அலுவலகங்களில் நிலவும் லஞ்சத்தை ஒழிக்கும் புதிய சட்டத்தைப் பிறப் பிக்கும் உத்தரவில் புதிய அரசு கையெழுத் திட வேண்டும். புற்றுநோய் போல, நாட்டின் வளர்ச்சியை, ஒழுக்கத்தை அரித்துக் கொண் டிருக்கும் லஞ்சத்தை ஒழிக்காவிட்டால், அரசு இயந்திரத்தின் செயல்பாடு மிக மோசமாகிவிடும்.
பொன்.கணேசன், தேனாம்பேட்டை
புதிதாக வரப்போகும் தமிழக அரசு முத்தான 3 திட்டங்களை முழுவேகத்தில் செயல்படுத்தும் 3 உத்தரவுகளில் கையெழுத்திட வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் உத்தரவுக்கு முதல் கையெழுத்து போடப்பட வேண்டும். அடுத்து, நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்திவரும் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்துக் கட்டும் வகையில் லோக் ஆயுக்தா உள்ளிட்ட இன்னும் சில புதிய கடுமையான சட்டங்களை ஏற்படுத்தி, அதனை நடைமுறைப்படுத்திட 2-வது கையெழுத்தை புதிய அரசு போட வேண்டும்.
இன்றைய சூழலில் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், விவசாயம் குறைந்து வருவது, குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு காரணம் தண்ணீர் பற்றாக்குறையே. இதனைப் போக்க தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி தண்ணீர் சேமிப்பினை கட்டாயப் படுத்த வேண்டும். இதற்கான உத்தரவில் 3-வது கையெழுத்தினை அரசு இட வேண்டும்.
எம்.பாஸ்கர், வேப்பேரி
தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்ப மாக இருக்கும் மதுவிலக்கினை அமல்படுத்திட, தமிழகத்தின் புதிய அரசு தனது முதல் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மதுவிலக்கை கொண்டு வருவதற்கு தமிழ கத்தின் அனைத்து தரப்பு மக்களிடம் ஆதரவு உள்ளது.
அடுத்து, மாநிலம் முழுவதும் அரசு நிலங் கள், கோயில் நிலங்கள், நீராதாரங்கள் ஆகிய வற்றில் செய்யப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு களை தயவு தாட்சண்யம் பார்க்காமல், போர்க் கால அடிப்படையில் அகற்ற வேண்டும். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்கிரமிப்புகளால் வெள்ள நீர் ஊருக்குள் புகுவது போன்ற பிரச்சினைகளுக்கு உடனுக் குடன் தீர்வு காண வேண்டும். அடுத்து, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் கள் தேய்ந்து கொண்டே வருகின்றன. விவசாயிகளையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்பதற்கு விவசாயத் தொழிலை பாதுகாக்கக் கூடிய உத்தரவை பிறப்பிக்கும் கோப்பில் புதிய அரசு 3-வது கையெழுத்திட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT