Published : 16 Apr 2016 09:39 AM
Last Updated : 16 Apr 2016 09:39 AM

வாக்காளர் வாய்ஸ்: வழக்குகள் இல்லாத அரசியல் தலைவர்கள்

இந்த வாரத்துக்கான தலைப்பு



வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், எதை பிரதான அம்சமாகக் கருதி வாக்களிக்க வேண்டும்? கட்சியா... அதன் தலைவர் மீதான ஈடுபாடா... அல்லது, உங்கள் தொகுதி வேட்பாளரா..? இதில் எதுவானாலும் கட்சி/தலைவர்/வேட்பாளரின் எந்தத் தகுதிக்கு முதலிடம் அளித்து வாக்களிக்க முடிவு செய்ய வேண்டும்?

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 என்ற எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

ஆர்.ராமு, தண்டையார்பேட்டை

அனைத்துக் கட்சிகளும் பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. கட்சி சார்பாகவே தலைவர்களை பார்க்கும் சூழ்நிலை உள்ளது. அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் அடிப்படையில் வாக்களிக்கும் நிலை வரவேண்டும். வேட்பாளரின் தகுதியை ஆராயாமல் அவர் பெரும் பணக்காரரா என்பதை வைத்தே அவருக்கு கட்சிகள் சீட்டு வழங்குகின்றன.

அந்த வேட்பாளர்களின் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆராய வேண்டும். வழக்குகள் இல்லாத அரசியல் தலைவர்கள் இருப்பது தற்போது அரிதாகி வருகிறது.



லெட்சுமிபதி, தாம்பரம்

அனைத்துக் கட்சிகளுமே மக்களி டம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவர் களிடமுள்ள வாக்குகளை பெறுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இதில் பணப் பட்டுவாடா ஒருபுறமிருக்க, மக்களும் ஓட்டுக்காக பணம் வாங்குவதை குற்றமாக கருதாமலிருக்கிறார்கள். எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரதான அம்சமாக கருத வேண்டியது தொகுதி வேட்பாளர் நேர்மை, பண்பு மற்றும் மக்கள் நலனில் அக்கறை, மதுவிலக்கை மனப்பூர்வமாக ஆதரிப்பவரா, ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டவரா போன்ற பல்வேறு பண்புகளை சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க முடிவெடுக்க வேண்டும்.



பிரவீன் மண்டேலா, ராமாபுரம்.

மக்களை நல்வழிப்படுத்தும் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் உரிமை நம் அனை வருக்கும் உள்ளது. இதுதான் ஜனநாயகம் கொடுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம். ஊழல் இன்று நாட்டில் பரவிக் கிடக்கிறது. இந்த சூழ்நிலையில் ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு, போதை பொருள் தடுப்பு நடவடிக் கைகளின் தீவிரம் காட்டும் தலைவரை தேர்ந்தெடுத்து, அவர் சார்ந்த கட்சிக்கு எனது வாக்கினை அளிப்பேன். நாடு வல்லரசு ஆக வேண்டும் எனில் ஊழல், மது, மக்க ளின் அறியாமை இவையெல்லாம் ஒழிக்கப் பட வேண்டும். அதை ஒழிக்கும் நம்பிக் கையை கொடுக்கும் கட்சியின் தலை வரை மையப்படுத்தி வாக்குகளை அளிப்பேன்.



ஜா.ஆரோக்கியதாஸ், நுங்கம்பாக்கம்.

கட்சி சார்ந்த அரசியல் உள்ள நம் நாட்டில், நாட்டின் பிரதமர், முதலமைச் சர் என அனைவருமே அரசி யல் கட்சிகளின் தலைவர் களாக மட்டுமே இருக்கின் றனர். கட்சி சாராத நபர் எவரும் அரசின் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. எனவே, வாக் காளர்களாகிய நாம் கட்சி சார்ந்த வேட்பாளர் களை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், வேட்பாளர்களை அறிவிக்கும் கட்சிகள், தங்கள் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை திறமை, தகுதி, தொகுதிக்கு ஆற்றக்கூடிய பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட தேர்வுக்கு பின்னர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும்போது, மக்களுக்கும் சிறந்த தொரு வேட்பாளர்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இந்த நடைமுறையை கட்சிகள் பின்பற்றினால், கட்சி சார்ந்த அரசியலும் நாட்டில் செழித்து வளரும். மக்களுக்கும் நன்மை செய்யக்கூடிய வேட்பாளர்கள் எளிதில் கிடைப்பார்கள். அரசியலை வைத்து கொள்ளையடிப்பவர்கள், ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு அரசியலுக்கு வருவதை முற்றிலுமாக தடுக்க முடியும். எனவே, கட்சி சார்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்கும் நடைமுறை செம்மைப்படுத்தப்பட வேண்டும்.



எஸ்.செந்தமிழ்ச்செல்வி, கூடுவாஞ்சேரி

அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப எல்லோருக்கும் ஒவ்வொரு கட்சி பிடித்திருக்கும். ஒரு தலைவரை பிடித் திருக்கும். அதற்காக, கட்சி அறிவிக் கும் வேட்பாளரையோ அல்லது கட்சித் தலைவர் கைகாட்டி விட்டார் என்பதற் காகவோ, கண்மூடித்தனமாக, ஒரு வேட் பாளரை ஆதரித்து வாக்களிக்கக் கூடாது. நாடு நமக்கு கொடுத்திருக்கும் ஜனநாயக உரிமையை, நாட்டை நிர்வாகம் செய்ய நமக்கு வழங்கியுள்ள வாக்கு என்னும் அதிகாரத்தை, சொந்த விருப்பு, வெறுப்பு காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடாது.

நமக்கு பிடித்த கட்சி சார்பில் நேர்மையற்ற ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், எவ்வித ஆசாபாசங்களுக்கும் ஆட்படாமல், அவருக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும். இதர கட்சிகளில் யார் நல்லவ ராக தெரிகிறாரோ அல்லது சுயேச்சைகளில் யார் நல்லவர் என்று அடையாளம் காண முடிகிறதோ, அவருக்கே வாக்களிக்கும் சமூக வளர்ச்சி சார்ந்த சிந்தனை எல்லோ ருக்கும் வர வேண்டும். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமே தவிர, சிந்திக் காமல் அச்சடிக்கும் இயந்திரம்போல, எத்தனை தேர்தல் வந்தாலும் ஒரே கட்சிக்கு வாக்களிப்பது என்ற தெளிவற்ற தன்மையை எல்லோரும் கைவிட வேண்டும்.



ராஜன், கிழக்கு தாம்பரம்

சட்டமன்றத் தேர்தலில் தங்கள் தொகுதி வேட்பாளரை பிரதான அம்சமாக கொண்டுதான் வாக்களிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x