Published : 15 Apr 2016 12:28 PM
Last Updated : 15 Apr 2016 12:28 PM
இந்த வாரத்துக்கான தலைப்பு
வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், எதை பிரதான அம்சமாகக் கருதி வாக்களிக்க வேண்டும்? கட்சியா... அதன் தலைவர் மீதான ஈடுபாடா... அல்லது, உங்கள் தொகுதி வேட்பாளரா..? இதில் எதுவானாலும் கட்சி/தலைவர்/வேட்பாளரின் எந்தத் தகுதிக்கு முதலிடம் அளித்து வாக்களிக்க முடிவு செய்ய வேண்டும்? நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 என்ற எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும். |
கிறிஸ்துராஜ், சென்னை
தனது தொகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம், வளர்ச்சி மற்றும் பாது காப்பு ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்துகிற வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் விவசாயம், கல்வி, மருத் துவம் ஆகியவற்றை அரசே ஏற்று நடத்த முழுவதும் கவனம் செலுத்தும் வேட்பாளருக்கும், மனித உரிமைகளையும், சமூக நீதி மற்றும் குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாக்க முன்வரும் வேட்பாளருக்கும்தான் நாங்கள் வாக்களிப் போம்.
முனைவர் கே.ஜி.பழனி, பள்ளிக்கரணை
கட்சி அபிமானிகள் அவரவர் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை யாராலும் தடுக்க முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணிகள் கொள்கை ரீதியானது அல்ல. தேர்தலை எதிர்கொள்ள ஏற்படுத்த கூட்டு என்பதில் அரசியல் கட்சிகள் தெளிவாக உள்ளன. கூட்டணிகளிலுள்ள ஒவ்வொரு கட்சியும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றி பெற்றால் நாளை ஆட்சி அமைக்கும் பெரிய கட்சியுடன் பேரம் பேசவும் தயாராகவே இருப்பார்கள். தேர்தல் அறிக்கையில் கூறியவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியும் என்பதற்கான நிதி ஆதாரத்தைப் பற்றி எந்தக் கட்சியும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. எனவே தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்துவிட்டு பின்னர் ஏமாந்துவிடக் கூடாது.
இந்தக் கட்சிக்கு கொஞ்சம், மற்ற கட்சிக்கு கொஞ்சம் என வாக்களித்து தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு ஏற்படுத்திவிடக் கூடாது. நாமே குதிரை பேரத்துக்கு வழிவகுத்திடாமல், எந்தக் கட்சியில் ஜனநாயகம் உள்ளதோ, எந்தக் கட்சியின் அமைச்சர்கள் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டாலும் சுயமாக சிந்தித்து செயல்படுவார்களோ அந்தக் கட்சிக்கு வாக்களிப்பதுதான் நன்மை அளிக்கும்.
நெல்லை புகாரி, சேப்பாக்கம் சென்னை
இதற்கு முன் ஆட்சியிலிருந்தவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் வாக்களிப்பேன்.
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்
தமிழகத்தில் புற்றீசல்கள் போல புதிய கட்சிகள் முளைத்து வருகின்றன. இந்த சிறிய கட்சிகள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானதாகும். எனவே வாக்கா ளர்கள் கவனமுடன் வாக்களிக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட வேட்பாளர் மிகவும் நல்லவராக இருந்தால்கூட அவர் வெற்றிபெற்று எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. தேசிய கட்சிகள் வலுவிழந்து உள்ள நிலையில் பிரதான மாநில கட்சிகளில் இரண்டில் எது நல்லது செய்யும் என்று முடிவுசெய்து ஏதேனும் ஒன்றுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். இதுதான் தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யும். வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை சிதறவிட்டுவிட்டு வாக்குகளை பயனற்ற தாக்கி விடக்கூடாது.
ஆர்.நேரு, புதுப்பெருங்களத்தூர்
கட்சி என்பது கூட்டணி மாறும்போதும் மாறாத கொள்கை யுடையதாக இருக்க வேண் டும். கூட்டணியில் சில இடங் களுக்காக தங்கள் கொள் கையை அடமானம் வைக்காத கட்சியாக இருக்க வேண்டும் தலைவர் என்பவர் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும். இதுதான் ஜனநாயகம்.
வேட்பாளர் என்பவர் மக்கள் எளிதில் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும். வெற்றிபெற்ற பின் வேறு கட்சிக்கு விலைபோகாதவராக இருக்க வேண்டும். தினசரி தொகுதி மக்களை சந்திப்பதை அன்றாடப் பணியாக நினைப்பவராக இருக்க வேண்டும். தான் ஒதுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கமிஷன் பெறாதவராக இருக்க வேண்டும். இவை அத்தனைக்காகவும் நான் கனவு காண்கிறேன். ஒருவேளை இவை கனவாகவே போய்விடுமோ தெரியவில்லை.
ரதீஷ், செங்கல்பட்டு
தேர்தல் என்பதும், வாக்களிப்பது என்பதும் ஒவ்வொருவரது தனிப்பட்ட விருப்பம். தனிப்பட்ட உரிமை. எனவே வாக்களிப்பது என்பதும் அவரவர் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கும். கட்சி, கட்சித் தலைமை என்பதை விட அவரவர் தங்களது தொகுதி சார்ந்த வேட்பாளர்களையே தேர்வு செய்ய முயலவேண்டும். அப்போதுதான் அடிப்படை பிரச்சினைகளை நாம் நம் பிரதிநிதிகள் மூலம் ஆட்சியின் தலைமைக்கு கொண்டு சேர்க்க முடியும்.
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்
சட்டமன்றத் தேர்தலில் லஞ்சத்தைத் தவிர்க்க வேண்டும், இலவசம் என்ற சொல் இனிமேல் தமிழகத்தில் வேண் டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து வாக்காளப் பெருமக்கள் வாக்களிக்க முன்வர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT