Published : 29 Apr 2016 10:40 AM
Last Updated : 29 Apr 2016 10:40 AM
இந்த வாரத்துக்கான தலைப்பு:
வேட்பாளர்கள் கும்பிட்ட கரங்களுடன் வீதி வீதியாக வந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டார்கள். உங்களைத் தேடி வரும், உங்கள் தொகுதி வேட்பாளர்களிடம் நீங்கள் முக்கியமாக என்ன கேள்வி கேட்பீர்கள். அதற்கு அவர் தரும் எந்த பதில் உங்களை திருப்திபடுத்தும். கேள்வியையும் பதிலையும், ஏன் இந்த கேள்வி என்ற காரணத்தோடு கூறி பதிவு செய்யுங்கள்.
எஸ்.லெட்சுமிபதி, தாம்பரம்
வேட்பாளர்களிடம் கேள்வி கேட்க வாய்ப்பு கிடைக்குமானால், எங்கள் பகுதி யான மேற்கு தாம்பரத்தில் கடும் வெள் ளத்தில் மூழ்கிய நிலையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குடிக்கக்கூட தண்ணீரின்றி இருந்த நிலையில் நீங்க ளெல்லாம் எங்கு சென்றிருந்தீர்கள்? தேர் தல் நேரத்தில் மட்டுமே வாக்கு கேட்க அணி வகுத்து வருகின்ற நீங்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு தொகுதி மக்களை 3 மாதத்துக்கு ஒருமுறையாவது சந்திக்க வருவீர்களா? ஆகிய இரண்டு கேள்விகளை யும் கேட்பேன். இதற்கு நேர்மையாக பதில ளிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப் பேன்.
துரை, கோட்டூர்புரம்
சட்டப்பேரவை உறுப்பினராக மக்க ளுக்கு சேவை செய்யப் போகிறவர், அப் பதவிக்கு வரும் முன்னரே மக்களுக்கு சிறு சிறு சேவைகளை செய்திருக்க வேண்டியது அவசியம். எனக்கு வாக்குரிமை கிடைத்து 33 வருடங்களாக எனது வாக்களிக்கும் கடமையை முறையாக நிறைவேற்றியுள் ளேன். ஆனால் இதுவரை எந்த வேட்பாள ரும் என்னிடம் வந்து வாக்கு கேட்டு பிரச் சாரம் செய்ததில்லை. பிரச்சார வாகனத் திலேயே அமர்ந்துகொண்டு வாக்கு சேக ரித்தவர்களைத்தான் பார்த்திருக்கிறேன்.
ஒருவேளை இந்த முறை என்னிடம் வாக்கு கேட்டு அவர்கள் வந்தால், லஞ்சம் அதிகமாக உள்ள நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், பதிவாளர் அலுவல கம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போன்றவற்றில் உரிய பயன்களைப் பெற யாருக்கேனும் உதவி செய்து கொடுத்திருக் கிறீர்களா? ஏழை, எளிய மக்களுக்கு குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை பெற்றுத் தந்திருக்கிறீர்களா? அல்லது இதுபோன்ற உதவிகளை கேட்பவர்களுக்கு அரசு அலு வலகங்கள் இருக்கும் இடத்தையாவது காட்டி யிருக்கிறீர்களா? என்று வேட்பாளர்களிடம் கேட்பேன்.
அதேபோல, வசதியான வேட்பாளர்கள் என்றால் காரிலேயே போகும் நீங்கள் போக்குவரத்து விதிகளை ஒழுங்காக பின்பற்றியிருக்கிறீர்களா? பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது, காரை நிறுத்தி பொறுத்திருந்து சென்றிருக் கிறீர்களா? இப்படி ஏதேனும் ஒரு காரியம் செய்திருந்தால் போதும். அவர்களுக்கே வாக்களிப்பதாக அங்கு உறுதி அளிப்பேன்.
லியாகத் அலி, அடையாறு
நம்மில் 90 சதவீத வாக் காளர்கள் கேள்வி கேட் கும் திறனே இல்லாதவர் களாகத் தான் இருக்கி றார்கள். மீதமுள்ள 10 சதவீத வாக்காளர் களை, அரசியல் கட்சி யினரும், இதர வேட்பாளர் களும் திரும்பியே பார்ப் பதில்லை. நமது நாட்டில் எப்போது சாதி, மதம் உள்ளடக்கிய அரசியல் ஒழிகிறதோ அன்றுதான் தகுதி யான வேட்பாளர்களை நாம் உருவாக்க முடியும். மக்களும் அதற்கான பாதையில் வாக்களித்தால் மட்டுமே இந்த மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். நாம் கேள்வி களை எழுப்பினாலும் கூட அதற்கு பதிலளிக் கக்கூடிய அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இல்லை என்பதே உண்மை.
சிவசங்கரி, சூளைமேடு
வாக்கு கேட்டு வருவோரிடம் நம்மால் எதிர்கொண்டு கேள்வி களைக் கேட்பது என்பது சாத்திய மில்லாதது. நாம் என்ன கேள்விகளை முன்வைத்தாலும் அவர்கள் அப் போதைய சூழ்நிலையில் அனைத் துக்கும் தலையாட்டி விட்டுத்தான் செல்வார்கள். அதேபோல ஏற்கெனவே மக்கள் பிரதிநிதியாக இருந்தவர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார் என்றால் மட்டுமே, ஏன் இதைச் செய்யவில்லை, ஏன் அதைச் செய்யவில்லை எனக் கேட்க முடியும். புதியவராக இருந்தால் அவரது எண்ணம், நோக்கம், கொள்கை குறித்துதான் கேள்வி எழுப்ப முடியும். அதற்கு அவர்கள் உண்மையாக பதில் கூறுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எனவே ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கைகளை மக்கள் படிக்க வேண்டும். குறைந்தபட்சம் வீதிக்கு ஒருவராவது கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளைப் படித்துத் தெரிந்துகொண்டு, அதில் இருந்து, திட்டங்கள் நிறைவேற்றுவதில் உள்ள சாத்தியக்கூறுகள் பற்றி கேட்கலாம்.
இது அனைத்துமே எப்படி கேள்வி கேட்கலாம் என்பதே. ஆனால் நமக்குள்ள பிரச்சினை என்னவென்றால், யார் கேள்விகளைக் கேட்பது என்பதே. இதுவரை நாம் பழகி வந்த அரசியல் சூழல் நமக்கு இப்படியொரு அனுபவத்தையே கற்றுக் கொடுத்துள்ளது. அரசரைப் போல, கடவுளைப் போலவே கவுன்சிலரையும் பார்க்கிறார்கள் மக்கள். அந்த நிலை மாற வேண்டும்.
துப்புரவுப் பணியாளரைப் போலவே மக்களுக்குச் சேவையாற்றும் அரசாங்க வேலைதான் சட்டப்பேரவை உறுப்பினருக் கும் கொடுக்கப்படுகிறது என்பதை மனதில் வைத்தால் போதும். கேள்விகள் தானாகவே வந்து விழும்.
நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT