Published : 09 Apr 2016 11:35 AM
Last Updated : 09 Apr 2016 11:35 AM

வாக்காளர் வாய்ஸ்: அரசியல்வாதிகளுக்கு வயது உச்ச வரம்பு

இந்த வாரத்துக்கான தலைப்பு



குறுக்கீடுகள் இன்றி, தேர்தலை மேலும் செம்மையாக நடத்துவதற்கு வசதியாக, தேர்தல் ஆணையத்துக்கு வேறென்ன அதிகாரங்கள் கொடுக்கலாம்? தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம்?

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 என்ற எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.



அசோக், காவாங்கரை.

அரசியல்வாதிகளை மூன்று முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அவர்களது பதவி காலத்தில் சொத்துப் பட்டியல் அதிகரித்திருந்தால் கண்டிப்பாக அவர்களது மொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்து அரசின் கஜானாவுக்கு கொண்டுவர வேண்டும். அவர்கள் மீதுள்ள புகாரை 3 ஆண்டுகளுக்குள் விசாரித்து முடித்து அதற்கான தண்டனையை அறிவிக்க வேண்டும். 60 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு எந்த பதவியும் வழங்கக் கூடாது. மற்ற பணிகளுக்கெல்லாம் ஓய்வு வயது உச்சவரம்பு உள்ளதுபோல் அரசியல்வாதிகளுக்கும் வயது உச்ச வரம்பை கொண்டுவர வேண்டும்.



எம்.நடராஜன், சின்னகாஞ்சிபுரம்

தேர்தல் ஆணையம் முதலில் தேர் தல் முடிந்தவுடன் வாக்காளர்களிடம் நடைபெற்ற வாக்குப்பதிவில் எந்த தவறும் நடைபெறவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே வாக்கு எண்ணிக்கையை தொடங்க அனுமதிக்க வேண்டும். இதனால் மக்களிடையே எந்த சந்தேகமும் எழ வாய்ப்பில்லை.



ஆர்.கண்ணன், பெருங்குடிவாக்கம்

தேர்தல் அலுவலர்கள் அரசியல்வாதி களுடன் தொடர்பு இல்லாமல் இருப்பதை ஊர்ஜிதம் செய்யவேண்டும். தேர்தல் ஆணை யத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப் பட வேண்டும். வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை நேரடியாகவே சென்று கண் காணிக்க வேண்டும். தேர்தல் ஆணை யத்துக்கு தேர்தல் நடைபெறும் மாநில அரசு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். கிராமங்களில் பணம் கொடுத்து வாக்கு களை வாங்குவதை மத்திய போலீஸ் படையுடன் சென்று தேர்தல் ஆணையம் கண்காணித்து தடுக்க வேண்டும்.



பிரபாகரன், குன்றத்தூர்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. அது போல இங்கும் வேட்பாளர்கள் தேர்விலும் கருத்துக் கணிப்பு நடத்திவிட்டு, அதன் பிறகு வேட்பாளர்களை அறிவிக்கலாம். கட்சிக்களுக்குரிய வாக்கு விகிதத்தின் அடிப்படையில் உறுப்பினர்களை நியமித் தால் வாக்களித்த அனைத்து மக்களின் சார்பாகவும் பிரதிநிதிகள் நியமிக்கப்படும் வாய்ப்பு உருவாகும்.



மணி, திருமுடிவாக்கம்

ஓட்டுக்கு பணம் வாங்குவது குற்றம் எனக் கூறப்படும் நாட்டில், எல்லா அரசியல் கட்சிகளும் பதவிகளை விலைபேசி விற்கின்றன. விருப்ப மனு விண்ணப்பம் 500 ரூபாய், விண்ணப்பக் கட்டணம் 25,000, 30,000 ரூபாய் என விற்கின்றன. உண்மையிலேயே தேர்தல் முறையில் சீர்திருத்தம் வரவேண்டுமென்றால் விகிதாச்சார முறையை கொண்டுவர வேண்டும். எல்லாக் குறைபாடுகளுக் கும் தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு. சட்டத்தில் உள்ள ஓட்டை களைப் பயன்படுத்தி கட்சிகள் தப்பித்துக் கொள்கின்றன. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டுவந்தால்தான் தேர் தல் நியாயமாக நடைபெறும்.



சுகுமாரன், பெரம்பூர்

தேர்தலில் வாக்களிப்பது அனைத்து குடிமக்களின் கடமை ஆகும். போட்டியிடு பவர்களில் யாருமே நல்லவர்கள் இல்லை யென்றால் நோட்டாவுக்கே என் ஓட்டு. ஏதாவது சில தொகுதிகளிலாவது நோட்டா வெற்றி பெற்றால்தான் ஊழல் அரசியல்வாதிகளுக்கு அச்சம் இருக்கும். நோட்டாவுக்கு வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.



செண்பகராஜ், வில்லிவாக்கம்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களைத் தடுக்க வேண் டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளின் அங்கீ காரத்தை ரத்து செய்ய வேண்டும். வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக் கவும், இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கவும் போதிய விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்.



சூர்யா, பூவிருந்தவல்லி

அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்க் கட்சிகளை விமர்சிப்பதுபோல் தேர்தல் ஆணையத்தையும் விமர்சிக்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்பது போன்ற குற்றச் சாட்டுக்களை சுமத்துகிறார்கள். தேர்தல் ஆணையம் என்பது எப்போதும் நடுநிலை யான அமைப்பு ஆகும். தேர்தல் ஆணை யத்தின் மீது குற்றம் சாட்டினால் அவர் களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்க வேண்டும்.

ஏனென்றால் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை இவ்வாறு விமர்சிப் பதால், பொதுமக்கள் தேர்தல் ஆணையத் தின் மீதான நம்பிக்கையை இழந்து விடுகி றார்கள். தங்கள் கட்சிகளின் தோல் விக்கு தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டுகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்கவே கூடாது.



பெயர் வெளியிட விரும்பாத வாசகர்

தேர்தலை குறுக்கீடுகளின்றி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் இந்திரஜித் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். வேட்பாளர்களுக்கு அரசே நிதி யுதவி அளிப்பதன் மூலமாக கருப்பு பணம் வெளியில் புழக்கத்துக்கு வருவது தடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x