Published : 08 Apr 2016 10:46 AM
Last Updated : 08 Apr 2016 10:46 AM

வாக்காளர் வாய்ஸ்: குடியரசுத் தலைவர் ஆட்சி

இந்த வாரத்துக்கான தலைப்பு



குறுக்கீடுகள் இன்றி, தேர்தலை மேலும் செம்மையாக நடத்துவதற்கு வசதியாக, தேர்தல் ஆணையத்துக்கு வேறென்ன அதிகாரங்கள் கொடுக்கலாம்? தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம்?

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 என்ற எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.



பார்த்தசாரதி, அயன்புரம்

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது, குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்துவதோடு, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மேலும் அதிக அதிகாரங்கள் வழங்க வேண்டும். இந்தியாவின் எந்த அரசியல் பதவியும் 2 முறைக்கு மேல் ஒருவருக்கு வழங்கப்படக் கூடாது. ஏனெனில் 125 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் குறிப்பிட்ட சிலரே மீண்டும் மீண்டும் பதவிக்கு வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே ராஜினாமா செய்தால், அவர்களை மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட அனுமதிக்கக் கூடாது.



எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை

தேர்தல் ஆணையம் தற்போது அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. அனைவரும் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட அனைத்து வாக்காளர்களும் நாட்டு நடப்பையும், அரசியல் நிகழ்வுகளையும் தெரிந்து வைத்திருப்பதும் முக்கியம். நாடாளுமன்றத் தேர்தலா அல்லது சட்டமன்றத் தேர்தலா என்பது கூடத் தெரியாமல் பலர் வாக்களிக்கிறார்கள்.



தியாகராஜன், அயனாவரம்

தேர்தல் ஆணையம் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அடிமட்டத்தில் உள்ள அனைவரும் பெரும்பாலும் வாக்களித்து விடுகின்றனர். மேல்மட்டத்தில் உள்ளவர்களும், படித்தவர்களும்தான் வாக்களிப்ப தில்லை. இவர்கள் ஓட்டுப்போடும் தங்க ளது கடமையைச் செய்யத் தவறும்பட்சத்தில் இவர்களது பெயரை வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தால்தான் அனைவரும் வாக்களிப்பார்கள்.



ஜவஹர், முகலிவாக்கம்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை செம்மைப்படுத்த வேண்டும். தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களையும் விசாரிக்க “தேர்தல் ஆணைய தீர்ப்பாயங்கள்” அமைக்கப்பட வேண்டும். மாநிலத்திலும், மையத்திலும் அமையும் இத்தீர்ப் பாயங்கள் அனைத்து வழக்குகளையும் 3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.

இது வேட்பாளரின் வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட குறைபாடுகளையும் தீர்க்கும் வகையில் அமைய வேண்டும். இவை அமைக்கப்படும் வரை தேர் தல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண் டும். இங்கு எத்தனை வழக்குகள் வந்துள்ளன என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறி விக்க வேண்டும். அதில் எத்தனை வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன என்பதை அடுத்த தேர்தல் அறிவிக்கப்படும்போது தேர்தல் ஆணையமே முன் வந்து அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அவ்வழக்குகளின் தன்மை குறித்து பொதுமக்களுக்குத் தெரியவரும்.



ஏ.நந்தகோபாலன், ராமாபுரம்

நாடாளுமன்றத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ எது நடந்தாலும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான உரிமை, பாதுகாப்பு மற்றும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எனவே தேர்தல் நடைபெறும் காலத்தில் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் மற்ற அதிகாரிகளையும் பொது நிர்வாகத் தையும் கொண்டு வர வேண்டும்.

அப்போதுதான் எவரும் நான் முதலமைச் சர், அமைச்சர் என்ற அதிகாரத்தை பயன் படுத்திக் கொண்டு ஓட்டுக் கேட்கும் நிலையும், அதிகார துஷ்பிரயோகமும் தவிர்க்கப்படும். பதவியில் உள்ளவர் கள் அரசுப் பணம், அரசாங்க இடம் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார் கள். இதை அதிகாரிகளால் கேட்க முடியவில்லை. சட்டத் திருத்தம் கொண்டுவந்து இவற்றை நடை முறைப்படுத்த வேண்டும்.



மகேந்திரன், போரூர்

தேர்தல் சிறப்பாக நடைபெற வேண்டுமெனில், தேர்தல் பணிக்காக தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். இதற்காக ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் நியமிப்ப தற்கு பதிலாக, தேர்தல் பணிக்காக ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி 3 மாதங் களுக்கு தற்காலிகமாகவாவது புதிய ஊழியர்களை நியமித்துக் கொள்ள வேண் டும்.

தேர்தல் தேதி அறிவித்தவுடன் பதவியிலுள்ள அரசாங்கம் கலைக்கப் பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அரசு பதவியில் இருக்கும்போது அரசு ஊழியர் களும், காவல்துறையினரும் அரசுக்கு கட்டுப் பட்டுத்தான் ஆக வேண்டியிருக்கிறது. ஆட்சி கலைக்கப்பட்டால்தான் அவர்கள் சுதந்திரமாக பணியாற்ற முடியும். சில மாதங்கள் மட்டும் கவர்னர் ஆட்சி இருப்பதால் எந்த கெடுதலும் ஏற்படப்போவதில்லை. மாறாக இதே காலகட்டத்தில் ஏதாவதொரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அவர்கள் தங்களுக்குச் சாதகமாக அனைத்தையும் நடத்திக் கொள்கிறார்கள்.



தனவந்தன், தாம்பரம்

வயது முதிர்ந்த வாக்காளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் மொபைல் வாக்குச் சாவடி எனப்படும் நடமாடும் வாக்குப்பதிவு மையங்களைப் கொண்டு சென்று வயதான வர்களின் வாக்குகளைப் பெறலாம். தேர்தல் நடைபெறும் நாள் கோடைக் காலமாக இருப்பதால் வயதானவர்கள் ஓட்டுப் போடச் செல்வது சிரமமானதாக இருக்கும். எனவே இதுபோன்ற நடமாடும் வாக்குப் பதிவு மையங்களை உருவாக்குவதால் வாக்குப்பதிவு சதவீதத்தை மேலும் உயர்த்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x