Published : 19 Apr 2016 10:42 AM
Last Updated : 19 Apr 2016 10:42 AM
இந்த வாரத்துக்கான தலைப்பு
வாக்குக்காக பணமோ, ‘பரிசு’ பொருளோ அளிக்க அரசியல் கட்சிகள் தேடி வந்தால்... அவர்களை மக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஓட்டுக்கு ‘லஞ்சம்’ கொடுப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த சாமானிய மனிதர்களால் முடியுமா? அதிலுள்ள பிரச்சினைகள் என்னென்ன? நடைமுறையில் செயல்படுத்தக் கூடிய வகையில் யோசனைகளைச் சொல்லுங்கள்... நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 என்ற எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும். |
ஜவஹர், முகலிவாக்கம்
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனம். பணம் கொடுப்பவர்களை பிடித்துக் கொடுத்துவிட்டு சாமானிய மனிதர்கள் சட்டத்தையும், காவல்துறையையும், கட்சிக் காரர்களையும் எதிர்கொள்ள முடியுமா? ஆகவே இதைத் தடுக்க வேண்டுமெனில், செயல்படுத்த வேண்டிய ஒரே யோசனை பணம் கொடுக்கும் வேட்பாளரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நீக்குவதுதான். நீக்கிவிட்டு பிற வேட்பாளர்களைக் கொண்டு தேர்தல் நடத்த வேண்டும். இந்நடவடிக் கையை தேர்தல் ஆணையம் செய்ய வேண் டும்.
மேகி மல்லையா, திருவான்மியூர்
வாக்குக்காக பணமோ, பரிசுப் பொருளோ அளிக்க முன்வந்தால், அவர்களிடம் இருந்து மக்கள் அவற்றை வாங்காமல் ‘‘எனது அடுத்த 5 ஆண்டு கால எதிர்காலம் எனது வாக்கில்தான் உள்ளது’’ என்று கூறி ஒவ் வொரு மக்களும் அதனை எதிர்கொள்ள வேண்டும். பணம் வழங்குபவர்களை சட்டத் தின் முன் நிறுத்த சாமானிய மக்களால் முடியாது. அது சினிமாவில் மட்டும்தான் முடியும். மக்கள் அனைவரும் ஒன்றுகூடி போராடினால் சாத்தியமாகும். தனிப்பட்ட நபர்கள் எதிர்த்தால் அவர்களுக்கு பாது காப்பு இருக்காது. மேலும் இதனை நடை முறைப்படுத்த தேர்தல் ஆணையம் துண்டு பிரசுரங்களில் “லஞ்சம் கொடுப்பவர்களை சுட்டிக்காட்ட இந்த எண்ணுக்கு அழையுங் கள், உங்கள் விபரம் பாதுகாக்கப்படும்” என அச்சிட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யலாம்.
பாலமுருகன், கடலூர்
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்தால் மக்கள் அவர்களிடம் “ஓட்டை விலைக்கு வாங்க நீங்கள் தயார், ஆனால் விற்பதற்கு நாங்கள் தயாரல்ல” எனக் கூறலாம். தேர்தல் விதிமீறல்கள் பற்றி ஏராளமான புகார்கள் தேர்தல் ஆணையத் திடம் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையமும் வழக்குகள் பதிவு செய்து வருகிறது. ஆனால் இவற்றுக்கு எப் போது தீர்வு கிடைக்கும்? தேர்தலுக்கு முன்பே தகுந்த நடவடிக்கை எடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டால் மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை ஏற்படும்.
மகேந்திரன், போரூர்
வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் தரும் விஷயத்தில் வாக்காளர்கள் எதுவுமே செய்ய இயலாத நிலை யில்தான் உள்ளனர். அனைத்து கட்சியிலுமே வேட்பாளர்களாக நிற் பவர்கள் பெரும்பாலும் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களுக்குதான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் திருமங்கலம் பார்முலா என்பது ஒரு கட்சிக்கு மட்டும் உரியது அல்ல. அனைத்து கட்சிகளுமே பணம் கொடுக்கின்றன. வேட்பாளர்கள் வீடு தேடிவந்து பணம் கொடுத்தாலோ, பால்காரர்கள் போன்றோர் மூலமாகவோ கொடுப்பதை வேண்டாம் என்று சொல்ல முடியாத சூழ்நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள்.
ஒரு கட்சியினரிடம் பணம் வேண்டாம் என்றால் அந்தக் கட்சிக்காரர்களுக்கு எதிராளியாகி விடு கிறார்கள். சாதாரண மக்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சினை. தேர்தலுக் குப் பின் மக்கள் தங்கள் தேவைகளுக் காக அவர்களை அணுகும்போது நீங்கள் எங்கள் கட்சியில்லை என் பார்கள். இதனால் பல்வேறு பிரச் சினைகளை மக்கள் சந்திக்க வேண் டியிருக்கிறது. எனவே சாதாரண மக்களால் எதுவுமே செய்ய முடி யாது. மனதளவில் மட்டும்தான் கோபப்பட முடியும். கொடுக்கும் அனைவரிடத்திலுமே பரிசுப் பொருட் களை வாங்க வேண்டிய கட்டாயத் தில்தான் இருக்கிறார்கள்.
3 கட்சியினரிடம் வாங்கினார்கள் என்பதால் மூவருக்கும் ஓட்டுப்போட முடியாது. மனசாட்சிப்படி யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தோன்றுகிறதோ அவர்களுக்கு மட்டும்தான் வாக்களிக்க முடியும். இதுதான் நடந்து வருகிறது. நாங்கள் பணம் வாங்க மாட்டோம் எனக் கூறுவதோ, புகார் செய்வதோ எதுவும் நடக்காது. எங்கு சென்றாலும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களாக கொடுக்க ஏதாவது ஒன்றை கொண்டு வருகிறார்கள். அப்படி வருபவர்கள் தெரிந்தவர்களாகவும் இருக் கிறார்கள். வாங்க மறுத்தால் அப்படியானால் நீங்கள் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவீர்கள், உங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என மிரட்டுகிறார்கள். பொது வாக தாம்பரம், கிழக்கு தாம்பரம் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாத நேரத்தில் பணம் வழங்குகிறார்கள். கடந்த வாரத்தில் 2 நாட்கள் இவ்வாறு நடந்தது. வாங்கவே மாட்டோம் என்று சொல்ல முடியாத நிலைமையில் உள்ளவர் கள் என்னதான் செய்வார்கள்.
044-42890002
நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் இந்த எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT