Published : 29 Mar 2016 10:49 AM
Last Updated : 29 Mar 2016 10:49 AM

உங்கள் குரல்: அகற்றப்பட்ட நிழற்குடைகளால் பயணிகள் அவதி

அகற்றப்பட்ட நிழற்குடைகளால் பயணிகள் அவதி

சென்னை

அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் கலெக்டர் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்த இரு நிழற்குடைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி விட்டதால் பயணிகள் வெயிலில் நின்று அவதிப் பட்டு வருவதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாநகரைச் சேர்ந்த பி.பூமிநாதன் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக தெரிவித்ததாவது: அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் கலெக்டர் நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்குள்ள ஜீவன் பீமாநகர் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றன. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்த இரு நிழற்குடைகளை, புதுப்பிப்பு பணிக்காக மாநகராட்சி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றியது. இதுவரை அங்கு புதிய நிழற்குடைகளை அமைக்கவில்லை.

இதனால் இங்கு பஸ் ஏற வரும் பயணிகள் தற்போது வெயி லில் நின்று, வெப்பம் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடமும் புகார் தெரிவித் திருக்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் அகற்றப் பட்ட நிழற்குடைகளை உடனே அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக மாநகராட்சி பொறியாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தற்போது தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால் தேர்தல் பணிகள் முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.



மின்சார ரயில் நிலையங்களில் வெளியூர் டிக்கெட் பெற குளறுபடி

சென்னை

மின்சார ரயில் நிலையங்களில் வெளியூர் செல்வதற்கான டிக்கெட் பெறுவதில் ஏற்பட்ட குளறுபடியால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக வாசகர் ஆர்.எம்.முகமது கஜானி ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறியிருப்பதாவது:

இதுவரையில் எழும்பூரிலிருந்து புதுச்சேரி செல்வதற்காக மீனம்பாக்கம் ரயில் நிலையத் தில்தான் டிக்கெட் எடுத்துக்கொண்டு செல் வோம். ஆனால், தற்போது “ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான மென்பொருள் மாற்றப்பட் டுள்ளது. எனவே எழும்பூரிலிருந்து புதுச்சேரி செல்ல இங்கு டிக்கெட் பெற முடியாது. எழும்பூர் சென்றுதான் டிக்கெட் வாங்க வேண் டும். தாம்பரத்திலிருந்து புதுச்சேரி செல்ல இங்கு டிக்கெட் வழங்கப்படும்” என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வித முன்னறிவிப்பும் இல்லா மல் திடீரென மாற்றியுள்ளனர் மேலும், வெளியூர் செல்ல வேண்டு மென்றால் 2 ரயில் நிலையங்களில் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஒரே நாளில் பயணம் மேற்கொள் வோருக்கு வசதியாக புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் வெளியூர் டிக்கெட்களை பெறும் வசதி உள்ளது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.



பள்ளிப்பட்டு அருகே பொதுக்குளம் ஆக்கிரமிப்பு

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு அருகே பொதுக்குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ‘தி இந்து- உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட வாசகர் ஒருவர் தெரிவித்ததாவது:

பள்ளிப்பட்டு வட்டத்துக்கு உட் பட்ட நொச்சிலியில் பொருளா தாரத்தில் பின்தங்கிய மக்கள் வசிக்கும் இரு குடியிருப்பு பகுதி கள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இவ்விரு குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தி யில் 2 ஏக்கர் பரப்பளவிலான பொதுக் குளம் ஒன்று இருக்கிறது. பள்ளிப்பட்டு - திருத்தணி சாலையில் உள்ள இந்த பொதுக் குளம், நொச்சிலி பகுதியில் நிலத் தடி நீர் மட்டத்தை உயர்த்தக் கூடியதாக உள்ளது.

இந்நிலையில், நொச்சிலியில் உள்ள இந்த குளத்தில் பள்ளிப்பட்டு - திருத்தணி சாலையை ஒட்டியுள்ள கரை பகுதியை சிலர் வீடு கட்டியும், தோட்டங்கள் அமைத்தும், குப்பை கொட்டும் இடமாகவும் மாற்றி ஆக்கிரமித்துள்ளனர்.

தற்போது அரை ஏக்கர் பரப்பள வில் உள்ள இந்த ஆக்கிரமிப்புகள் மேலும் விரிவடைந்தால், வருங் காலத்தில் பொதுக் குளமே காணா மல் போய்விடும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், இரு குடியி ருப்பு பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கு இடையே மோதல் வெடிக்கவும் வாய்ப்புள்ளது. ஆகவே, நொச்சிலி பொதுக்குளப் பகுதியை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “நொச்சிலி கிராமத்தில் இரு குடியி ருப்பு பகுதிகளுக்கு இடையே உள்ள பொதுக்குளம் ஆக்கிரமிக் கப்பட்டது தொடர்பாக, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.





அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x