Published : 22 Mar 2016 10:50 AM
Last Updated : 22 Mar 2016 10:50 AM

உங்கள் குரல்: மணியார்டர் உரிய நேரத்தில் சென்றடையவில்லை

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:



மணியார்டர் உரிய நேரத்தில் சென்றடையவில்லை

சென்னை

சென்னை ஆவடியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் கடலாடிக்கு அனுப்பிய மணியார் டர் உரிய நேரத்தில் சென்றடையவில்லை என்று ‘தி இந்து உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசிய வாசகர் ஆர்.துரைசிங்கம் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும் போது, ‘‘ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யில் எனது தாயார் இருக்கிறார். அவருக்கு கடந்த 5-ம் தேதி மணியார்டர் அனுப்பினேன். ஆனால், அது சென்றடையவே இல்லை. நான் பணம் அனுப்பிய அஞ்சல் நிலையத் தில் கேட்டால், தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள். ஒரு வாரத்துக்கு மேலாகியும் அது சென்றடையவில்லை. இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது’’ என்றார்.

இது தொடர்பாக தமிழக வட்ட அஞ்சல் அதிகாரிகளிடம் கேட்ட போது, “ அஞ்சல் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வரு கின்றன. அனைத்து பணிகளுமே ‘சிபிஎஸ்’ எனப்படும் மைய வங்கி சேவை மூலம் நடந்து வருகின்றன. இதில், சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுகின்றன. ‘சிபிஎஸ்’ சேவை சில மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மணியார்டர் விவரங்களை அனுப்பினால், உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்கிறோம்” என்றனர்.

இதற்கிடையே கடந்த 14-ம் தேதி மணி யார்டர் தொகை தனது தாயாருக்கு சென்று சேர்ந்ததாக ஆர்.துரைசிங்கம் கூறியுள்ளார்.



அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு துப்புரவு பணி

காஞ்சிபுரம்

வாலாஜாபாத் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தின் துப்புரவு பணிகள் அனைத்தையும் மாணவிகளே செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் துன்புறுத்துவதாக ‘தி இந்து’ உங்கள் குரலில் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவிகள் ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறியதாவது:

பள்ளிக்கு சிறிது தாமதமாக வரும் மாணவி களை, பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் துப்புரவு பணி செய்யுமாறு ஆசிரியர்கள் கூறுகின்ற னர். மேலும், வகுப்பறையை இடமாற்றம் செய்யும்போது அதிக பாரமுள்ள நாற்காலிகளை தூக்கிச் செல்லுமாறு கூறி துன்புறுத்துகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வருவதில்லை. இதனால், பள்ளி வளாகத் தின் வெளியே உள்ள குழாய்களில் தண்ணீர் பிடித்து வருமாறு கூறுகின்றனர். குடிநீர் வசதியும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா கூறியதாவது:

தற்போது 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதனால், வாலாஜாபாத் தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு சிறப்பு ஆசிரியராக பணியமர்த்தப்பட்டுள்ளார். எனவே, உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.



வணிக வரித்துறை சோதனைக்காக சாலையில் நிற்கும் சரக்கு லாரிகளால் தொடரும் போக்குவரத்து நெரிசல்

திருவள்ளூர்

புழல் அடுத்த காவாங்கரையில் வணிக வரித் துறையின் சோதனைக்காக சாலையில் வரிசை கட்டி நிற்கும் சரக்கு லாரிகளால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என, உங்கள் குரலில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ’தி இந்து’ உங்கள் குரலில் பொதுமக்கள் தெரிவித்த தாவது: புழல் அருகே காவாங்கரை யில் சென்னை- கொல்கத்தா நெடுஞ் சாலையை ஒட்டி, தமிழக வணிக வரித்துறையின் சோதனைச் சாவடி செயல்படுகிறது. நாள்தோறும் 24 மணிநேரமும் செயல்படும் இந்த சோதனைச் சாவடி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், பிரதான சாலை மற்றும் அணுகு சாலை பகுதியில், எந்நேரமும் 20-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

அப்படி நிற்கும் லாரிகளால் காவாங் கரை பகுதியில் அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப் பாக, காலை மற்றும் மாலை வேளை களில் குறித்த நேரத்துக்கு பணியிடங் கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வீடுகளுக்கு செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

இதுகுறித்து, தமிழக வணிக வரித் துறை அதிகாரி தெரிவித்ததாவது:

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லையை ஒட்டி, காவல்துறை, வணிக வரித் துறை உள்ளிட்ட துறை களின் சோதனைச் சாவடிகள் அடங்கிய வளாகம் அமைக்கும் பணி முடிவுக்கு வந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு செயல்பாட்டுக்கு வர உள்ள அந்த சோதனைச் சாவடி வளாகத்துக்கு காவாங்கரையில் செயல்படும் சோதனைச் சாவடி மாற் றப்படும். அதன் பிறகு, காவாங்கரை யில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.





‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... 044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x