Published : 23 Feb 2016 09:48 AM
Last Updated : 23 Feb 2016 09:48 AM

உங்கள் குரல்: அசோக்பில்லர் மகாலிங்கபுரம் சிற்றுந்து சேவை குறைப்பு

அசோக்பில்லர் மகாலிங்கபுரம் இடையே இயக்கப்பட்ட சிற்றுந்து சேவை திடீரென குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிப்படுகின்றனர் என அப்பகுதி வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வாசகர் என்.ஜெக நாதன் ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறியிருப்பதாவது:

அசோக்பில்லர் லிபர்டி இடையே இயக் கப்பட்டு வந்த எஸ்30 சிற்றுந்து கடந்த சில மாதங்களாக மகாலிங்கபுரம் வரை யில் நீடிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரம் சென்று வருவதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வய தானவர்கள், பெண்கள் அவதிப்படுகின்றனர். இதையடுத்து, மேலும், ஒரு சிற்றுந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், கடந்த சில வாரங்களாக திடீரென சிற்றுந்து சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்தி ருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சரி யான கால அட்டவணை அமைத்து, சிற் றுந்துகளை இயக்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகளின் புகார் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தேவை அதிகமாக இருந்தால், கூடுதல் நடை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x